Published:Updated:

டாஸ்மாக்கை மூடக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விசித்திர பேரணி ( படங்கள்)

டாஸ்மாக்கை மூடக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விசித்திர பேரணி ( படங்கள்)
டாஸ்மாக்கை மூடக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விசித்திர பேரணி ( படங்கள்)

பெரம்பலூர்: டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வித்தியாசமான பேரணியை நடத்தினர்.

டாஸ்மாக்கை மூடக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விசித்திர பேரணி ( படங்கள்)

பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ  கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது.  மாநாட்டுக்கு முன்னதாக பேரணி நடத்தப்பட்டது. பெரம்பலூர் உழவர் சந்தையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி மைதானத்தில் முடிவடைந்தது.
 

டாஸ்மாக்கை மூடக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விசித்திர பேரணி ( படங்கள்)

பேரணியில் வந்தவர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியபடி வந்தனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'இந்தியாவில் தற்போது அதிகமாக ஊழல் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்கு ஊழல் செய்பவர்களை தூக்கிலிடவேண்டும். அப்போதுதான் ஊழலை தடுக்க முடியும்' என்றனர்.
 

டாஸ்மாக்கை மூடக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விசித்திர பேரணி ( படங்கள்)

ஊர்வலத்தின்போது, லலித்மோடி உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் ஊழல் அரசியல்வாதிகளின் உருவ பொம்மைகளை தூக்கிலிட்டு அதை ஏந்தியபடி வந்தனர்.

மேலும் பேரணியில் எழும்புக்கூடு வேடம் அணிந்த வாலிபர் ஒருவர் மது பாட்டில்களை சுமந்தபடி வந்து கொண்டிருந்தார்.
 

டாஸ்மாக்கை மூடக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விசித்திர பேரணி ( படங்கள்)

பேரணியில் வந்தவர்கள் எழுப்பிய. "தமிழக அரசே! பல பெண்களின் தாலியை அறுக்கும் டாஸ்மார்க்கை மூடு, இல்லையேல் நாட்டை விட்டு ஓடு, டாஸ்மார்க்கை திறந்து பெண்களின் தாலியை அறுத்துவிட்டு இலவச தாலி வழங்குவது நியாயம் தானா?" என்பது போன்ற கோஷங்கள் மக்களை கவர்ந்தன.


செய்தி & படங்கள்: சி.ஆனந்தகுமார்