Published:Updated:

நெடுஞ்சாலை டாஸ்மாக்கை ஆக.14க்குகள் அகற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலை டாஸ்மாக்கை ஆக.14க்குகள் அகற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
நெடுஞ்சாலை டாஸ்மாக்கை ஆக.14க்குகள் அகற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
நெடுஞ்சாலை டாஸ்மாக்கை ஆக.14க்குகள் அகற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை தமிழக அரசு சரியாக அமல்படுத்தவில்லை என்று கூறி சமூக நீதிப் பேரவை சார்பில் வழக்கறிஞர் கே. பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, மதன் பி. லோகுர், குரியன் ஜோசஃப் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைகளை அகற்ற கூடுதல் அவகாசத்தை உடனே வழங்க முடியாது. உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது? நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அரசு அகற்றியிருந்தால், இதுவரை எத்தனை கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? இந்த விவரங்களை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மே 7ஆம் தேதிக்கு (இன்று)  ஒத்திவைத்தது.

அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் 50 சதவீதம் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதி கடைகளை அகற்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

##~~##
ஆனால், டாஸ்மாக் கடைகளை அகற்ற தமிழக அரசுக்கு அவகாசம் அளிக்க கூடாது என்று கோரி எதிர்தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குகள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதனிடையே, டாஸ்மாக் கடைகளை அகற்றும் உத்தரவை மாநில அரசு சரியாக அமல்படுத்தவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலு என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.