Published:Updated:

வினையான விளையாட்டு - இந்தியர்களைத் துன்புறுத்துவதுபோல நடித்த அரபு மனிதருக்கு சிக்கல்!

இந்தியா - அமீரக அணிகள் மோதிய ஆட்டத்தின்போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

வினையான விளையாட்டு - இந்தியர்களைத் துன்புறுத்துவதுபோல நடித்த அரபு மனிதருக்கு சிக்கல்!
வினையான விளையாட்டு - இந்தியர்களைத் துன்புறுத்துவதுபோல நடித்த அரபு மனிதருக்கு சிக்கல்!

ன்னிடம் பணி புரிந்த இந்தியர்களை விளையாட்டுக்காகப் பறவைக் கூண்டில் அடைத்துத் துன்புறுத்துவது போல நடித்த சவுதி மனிதர் சிக்கலில் சிக்கியுள்ளார். 

ஆசிய கால்பந்து தொடரில் நேற்று ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இந்தியா மோதியது. அபுதாபியில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. போட்டிக்கு முன்னதாகச் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், சில இந்தியர்களைப் பறவைக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர். வெளியே அமர்ந்திருக்கும் அரபு மனிதர் கையில் கம்பு வைத்துக் கொண்டு, அடைபட்டுக் கிடப்பவர்களிடம் `யாருக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள்' என்று கேட்கிறார். உள்ளே இருப்பவர்கள். `இந்தியாவுக்குத்தான் சப்போர்ட் செய்வோம்’ என்கிறார்கள்.

உடனே அந்த அரபு மனிதர், `நீங்கள் இங்கேதானே வசிக்கிறீர்கள்... அப்படியென்றால் அமீரகத்துக்கு சப்போர்ட் செய்வதுதானே சரி. அமீரகத்துக்கு ஆதரவளித்தால்தான் உங்களை வெளியே விடுவேன்' என்று சொல்கிறார். உள்ளே அடைபட்டுக் கிடப்பவர்கள், 'நாங்கள் அமீரகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்' என்று சொன்ன பிறகே வெளியே விடப்படுவது போன்று அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. 

இந்த வீடியோ அமீரகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனித உரிமைகளுக்கு எதிரானது என்று குரல் எழுந்தது. உடனடியாக அமீரக போலீஸ், சம்பந்தப்பட்ட மனிதரை விசாரணைக்கு அழைத்துள்ளது. இது தொடர்பாக அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், `அரபு மனிதரின் செய்கை நாட்டின் சட்டத்துக்கு புறம்பானது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் செயல் கிரிமினல் குற்றம் மட்டுமல்ல... சகிப்புத்தன்மைக்கு எதிரானது. மனிதர்களை இந்த மாதிரி நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து மற்றோரு வீடியோ வெளியிட்ட அரபு மனிதர், ``இவர்கள் என்னிடம் என் தோட்டத்தில் பணி புரிபவர்கள். நான் அவர்களை அடிக்கவில்லை. அதில் ஒருவர் என்னிடத்தில் 22 ஆண்டுகளாகப் பணி புரிகிறார். அனைவரும் ஒரே தட்டில் சாப்பிடுவோம். உள்நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிடவில்லை'' என்று தெரிவித்தார். 

விளையாட்டு வினையாவது இப்படித்தானே!