Published:Updated:

திருச்சியில் அடுத்தடுத்த நாள்களில் இரண்டு போலீஸார் தற்கொலை! #Shocking

திருச்சியில் அடுத்தடுத்த நாள்களில் இரண்டு போலீஸார் தற்கொலை! #Shocking
News
திருச்சியில் அடுத்தடுத்த நாள்களில் இரண்டு போலீஸார் தற்கொலை! #Shocking

திருச்சியில் அடுத்தடுத்த நாள்களில் இரண்டு போலீஸார் தற்கொலை! #Shocking

தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கான காவலர் குடியிருப்பில் காவலர் முத்து, மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதுடன், ரத்தக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் நேற்று மாலை அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அடிக்கடி  அரங்கேறும் தற்கொலைகளால் பீதியில் உறைந்து கிடக்கிறார்கள் திருச்சி காவலர்கள்.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் அடுத்துள்ள தவளைக்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரின் மகள் செந்தமிழ்செல்வி. இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றுகிறார். கடந்த 2017-ல் பணிக்குச் சேர்ந்த செந்தமிழ்செல்விக்கு கடந்த வருடம் சிறை வார்டனாக பதவி உயர்வு கிடைத்தது.  இதையடுத்து திருச்சி கே.கே.நகரில் மத்திய சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படவே, தனக்கு வழங்கப்பட்ட வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தார்.

சிறைக்கு ‘ஷிப்டு’முறை பணி  என்பதால், நேற்று மாலை 6 மணியாகியும் சிறைவார்டன் செந்தமிழ்செல்வி, பணிக்கு வரவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் பணிக்கு வரவில்லை என்பதால் அவருடைய செல்போனில் சக ஊழியர்கள் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’செய்யப்பட்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால் அவரைத்தேடி சிறைக்காவலர்கள், அவரது வீட்டுக்கு நேற்று இரவு 8 மணியளவில் வந்து பார்த்தனர். அப்போது வீடு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த சிறைக்காவலர்கள், கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான  போலீஸார் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, பெட் ரூமில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் செந்தமிழ்செல்வி பிணமாக தொங்கினார். அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், கடலூரில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட சிறை வார்டன் செந்தமிழ்செல்விக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பணியில் அவருக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமா அல்லது வேறு எதாவது காரணம் இருக்குமா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், உயிரை மாய்த்துக்கொண்ட செந்தமிழ்ச்செல்வியும், திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் ஆண் சிறைக்காவலர் ஒருவரும் காதலித்ததாகவும், இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஆண் சிறைக்காவலர் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துவிட்டதாகக் கூறவே செந்தமிழ்ச்செல்வி அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. செந்தமிழ்ச்செல்வி, வரும் 6-ம் தேதி காதலனுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், அவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த தினங்களில் தமிழக காவல்துறை மற்றும் சிறைத்துறைகளில் பணியாற்றும் திருச்சி காவலர்கள் தற்கொலைகளால் அதிர்ந்து கிடக்கிறது திருச்சி போலீஸ் வட்டாரங்கள்.