Published:Updated:

'நாட்டின் மொத்த செல்வங்களும் 9 குடும்பங்களிடம் உள்ளது' - திருச்சியில் கொந்தளித்த அருந்ததிராய்

'நாட்டின் மொத்த செல்வங்களும் 9 குடும்பங்களிடம் உள்ளது' - திருச்சியில் கொந்தளித்த அருந்ததிராய்

'நாட்டின் மொத்த செல்வங்களும் 9 குடும்பங்களிடம் உள்ளது' - திருச்சியில் கொந்தளித்த அருந்ததிராய்

'நாட்டின் மொத்த செல்வங்களும் 9 குடும்பங்களிடம் உள்ளது' - திருச்சியில் கொந்தளித்த அருந்ததிராய்

'நாட்டின் மொத்த செல்வங்களும் 9 குடும்பங்களிடம் உள்ளது' - திருச்சியில் கொந்தளித்த அருந்ததிராய்

Published:Updated:
'நாட்டின் மொத்த செல்வங்களும் 9 குடும்பங்களிடம் உள்ளது' - திருச்சியில் கொந்தளித்த அருந்ததிராய்

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அடக்குமுறைதான் ஜனநாயகமா.. “எதிர்த்து நில்”  எனும் தலைப்பிலான மாநாடு நேற்று மாலை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ தலைமையில் நடைபெற்ற, இந்த மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததி ராய், வழக்கறிஞர் பாலன், உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆளூர் ஷாநவாஸ், ம.க.இ.க பொதுச்செயலாளர் மருதையன், தூத்துக்குடி வழக்கறிஞர் ஹரிராகவன், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகி வரதராஜன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சூர்யா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போலீஸார் அனுமதிமறுப்பால், உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடத்தப்பட்ட இந்த மாநாடு நடைபெற்றது. இருந்தும் மாநாட்டில் போலீஸார் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுத்ததாலும் மைதானம் பரபரப்பாகவே இருந்தது. மேலும் இந்த மாநாட்டுக்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு இயக்கங்களின் தொண்டர்கள்-நிர்வாகிகள் ஆகியோர் திருச்சியில் குவிந்தனர். மேடையில் சிறப்புரை ஆற்றிய அருந்ததிராய்,“பாபர் மசூதி இடிப்பு சம்பவம், தவறான பொருளாதார கொள்கையால் உருவான தாராளமயம் ஆகிய இரண்டும் ஒடுக்கப்பட்டோரை, மேலும் ஒடுக்கப்பட்டோராக மாற்றும் சக்தியாக உருவெடுத்து நிற்கின்றன. அறிவுசார் பல்கலைக் கழகங்கள் தொடங்கி மக்களின் சேவை சார்ந்த பெரு நிறுவனங்கள் வரை அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலைகளிலும் மதவாத சக்திகள், கார்ப்பரேட் சக்திகளின் அதிகாரமே மேலோங்கி நிற்கிறது. எதிர்த்து கேள்வி எழுப்பும் மாணவர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவாளர்களை மட்டும் வீழ்த்தாமல், மக்களின் அறிவையும் வீழ்த்த வேண்டும் என்ற வகையில் மக்களைச் சிந்திக்க வைக்காமல் உரிமைகளுக்காகப் போராடும் நிலையிலேயே வைத்துள்ளனர். இஸ்லாமியர்கள், பட்டியலின சமூகத்தினர், ஆதிவாசிகள், சிறுபான்மையினத்தவர், விவசாயிகள், கம்யூனிஸ்டுகள், மாவோயிஸ்ட்டுகள் என தனித்தனியாக அவரவர் உரிமைகளுக்காகப் போராடி வந்தனர். இப்போது, அனைவரும் ஒன்று சேர்ந்து மதவாத சக்திகள், பெருநிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஆண்டுக்கு ரூ.2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறிய பிரதமர் மோடி, அதனைச் செயல்படுத்தவில்லை. மாறாகப் பெருநிறுவனங்களே அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. அதானியின் சொத்துகள் மட்டும் 125 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளன. 75 சதவீத பொதுமக்களிடம் இருக்க வேண்டிய சொத்துகள் 9 பெருநிறுவன முதலாளிகள் வசம் உள்ளன. தமிழக அரசியலிலும், மத்தியில் காங்கிரஸ் மீதும் வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்தை முன் வைக்கும் பி.ஜே.பி., பெருநிறுவனங்களின் முதலாளித்துவத்தில் எழும் வாரிசு அரசியலைப் பற்றி கவலைப்படவில்லை.இந்தியாவின் மொத்த செல்வங்களில் சரிபாதி  செல்வங்கள் ஒன்பது குடும்பங்களுக்கு மட்டுமே குவிக்கப்பட்டுள்ளது . இந்த செல்வங்கள் ஒரு குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே குவிவதை தடுக்க வேண்டும். இந்த சொத்துக்குவியலை  அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் இதற்காக நாம் தொடர்ந்து போராடவேண்டும்.

இன்னும் சில வாரங்களில் நாட்டை ஆளும் பி.ஜே.பி., அரசை மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்குப் பிறகு வரும் புதிய ஆட்சியும் இதே கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அதேசமயம் பெருநிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. நாட்டில் தற்போது உள்ள மதவாத மற்றும் கார்ப்பரேட் சக்திகளை வீழ்த்தா விட்டால்,  இனிவரும்  காலங்களில் பெரும் பேரழிவுக்கு உதவிய குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும். வரும் தேர்தலில் பி.ஜே.பி., தோல்வியடைந்தாலும் அனைத்து நிலைகளிலும் கட்டமைத்துள்ள ஒடுக்குமுறை பயங்கரவாதம் ஆபத்தாகவே உள்ளன. மதவாத சக்திகளை வீழ்த்தாவிட்டால் அந்த சக்திகளை அனுமதித்த குற்றத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, சம நீதி, சம உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றால் வரும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி., வீழ்த்தப்பட வேண்டும்” என்றார்.

அவரையடுத்து  பேசிய  மருதையன், “கடந்த சில வருடங்களாக மக்கள் தங்களுடைய பிரச்னைகளுக்காகக் கூட வீதிக்கு வந்து போராட கூடாது என  இந்த அரசுகள் நினைக்கிறது. தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளான நியூட்ரினோ, ஸ்டெர்லைட்  உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கூட மக்கள் போராடக் கூடாது என நினைக்கும் அரசு பல்வேறு சதிகளைச் செய்கிறது. அதன் விளைவுதான் ஸ்டெர்லைட் பிரச்னையில் அப்பாவிகளைக் கொன்று குவித்தது.8 வழி சாலை திட்டத்தில்கூட நிலத்திற்காகக் கூட விவசாயிகள் போராட்டம் கூடாது என திட்டமிட்டு அரசு தொடர்ந்து செயல்படுகிறது. குறிப்பாக ஒரு பகுதியில் உள்ள பிரச்னைக்கு மற்றொரு பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்று போராடக்கூடாது என்று மக்களின் போராட்ட உணர்வைச் சிதைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.  

இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும், படேல் சிலை அமைப்பதற்கும் இந்தியா முழுவதிலுமிருந்து செங்கல்லைக் கொண்டு வாருங்கள், இரும்புகள் தாருங்கள் என முழக்கமிட்டார்கள்.  நந்திகிராம் போன்ற போராட்டங்களில் மக்கள் எதிர்த்த அத்தனை திட்டங்களையும் குஜராத்தில் கொண்டு சென்ற மோடிதான், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து, மக்களை நசுக்கிறார்கள்.

மக்கள் போராட்டத்தால் மட்டுமே பல விஷயங்களைச் சாதிக்க முடியும்.ஆட்சி மாறினால் அனைத்தும் சரியாகிவிடும் என நாம் நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. வரும் தேர்தலில் மோடி தலைமையிலான பி.ஜே.பி., அரசு மாற்றப்பட்டு வேற அரசுகள் வந்தாலும் மக்கள் பிரச்சனைகளான ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், 8 வழி சாலை திட்டம் போன்ற பிரச்னைகள் தீர்ந்து விடுமா என்றால் நிச்சயமாகத் தீராது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகத் தான் மக்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என்கிறோம்” என பேசினார்.