மீண்டும் ஹைட்ரோ கார்பன் கிணறு வெட்ட பூதமாகக் கிளம்புகிறது மக்கள் எதிர்ப்பு. தமிழகத்தில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டது வேதாந்தா நிறுவனம். முதல்கட்டமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 116 இடங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படக்கூடிய இடங்களில், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையைத் தயார் செய்வதற்காக 32 ஆய்வு எல்லைகளை வரையறுத்துக் கொடுத்து அனுமதி அளித்திருக்கிறது மத்திய சுற்றுச்சூழல் துறை.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கைப்பாணிக்குப்பம் பகுதியில் 139 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1,794 சதுர கி.மீட்டர் பரப்பளவிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “காரைக்கால், திருநள்ளாறு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்போவதாக, இரண்டு வருடங்களுக்கு முன் மத்திய அரசு எங்களுக்குத் தகவல் தெரிவித்தது. ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையை எடுத்தாலும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்றும் புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் கொடுக்காது என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினேன். இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகத் தகவல்கள் வருகின்றன. மக்களுக்கு எதிராக மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் எங்கள் மாநிலத்தில் செயல்படுத்த முடியாது” என்றார்.

இதுகுறித்து மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஜெகநாதனிடம் பேசினோம். “புதுச்சேரி பிற மாநிலங்களைப்போல கனிமவளங்கள் நிறைந்த மாநிலம் கிடையாது. இங்கிருக்கும் நிலத்தடி நீர்தான் எங்களுக்கு ஜீவாதாரம். ஹைட்ரோ கார்பன் போன்ற ஆழ்துளைக் கிணறுகளை இங்கு அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் முழுவதுமாக உவர்ப்பு நீராக மாறிவிடும். காரைக்காலில் கடலுக்குள் இந்தக் கிணறு அமைக்கப்பட்டால், சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் வளி மண்டலம் முழுவதும் வெப்பமாக மாறிவிடும். விவசாயம் அடியோடு அழிந்துவிடும். புதுச்சேரி மாநிலத்தைச் சுடுகாடாக மாற்ற வழிவகுக்கும் இந்தத் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி, கடும் போராட்டத்தை நடத்துவதுடன், சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்” என்றார்.

கிளம்பிவிட்டது எதிர்ப்பு. தேர்தல் முடிவுகளில் இருக்கிறது இதற்கான தீர்ப்பு!

- ஜெ.முருகன்