Published:Updated:

“பாறையில பட்டா... கேள்வி கேட்டா தப்பா?” - வேதனையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்

“பாறையில பட்டா... கேள்வி கேட்டா தப்பா?” - வேதனையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்
பிரீமியம் ஸ்டோரி

நீண்டகாலமாக வீடு இல்லாமல் வாழ்ந்துவந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கியது தமிழக அரசு. மூன்று ஆண்டுகளாக அந்த இடத்தையே காட்டாமல் சம்பந்தப்பட்ட மக்களை அலைக்கழித்த அரசு அதிகாரிகள் தற்போது மலையடிவாரத்தில் பாறைகள் சூழ்ந்த பகுதியில் வீட்டு மனைக்கான இடத்தைக் காட்டியிருக்கிறார்கள். சரியான வழித்தடம் இல்லாத, காட்டு யானைகள் உலவும் அந்தப் பகுதியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள்!

கோவையை அடுத்த எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது க.க.சாவடி. அங்கு 150 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த 40 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கும், இந்த கிராமத்தின் அருகிலிருக்கும் மேற்காலூர், நேதாஜிபுரம், தாட்கோ காலனி, சாவடி புதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 67 குடும்பங்களுக்கும் சேர்த்து 107 குடும்பங்களுக்கு, கடந்த 2016-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதன் பின்பு நடந்தவை அனைத்தும் அலட்சியத்தின் உச்சம்.

“பாறையில பட்டா... கேள்வி கேட்டா தப்பா?” - வேதனையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்

இதுகுறித்து க.க. சாவடியைச் சேர்ந்த காந்தி நம்மிடம், “பத்து வருடங்களுக்கு மேலாக இலவச வீட்டுமனைக் கேட்டுப் போராடிட்டு இருந்தோம். எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற சில மாதங்களிலேயே கொடிசியா மைதானத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாவுல 107 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கொடுத்தாங்க. ஆனா, மூணு வருஷமாகியும் அதற்கான இடத்தைக் கண்ணுலகூட காட்டலை. தாசில்தார் ஆபீஸுக்கு நடையா நடந்து எங்க பாதம் தேஞ்சதுதான் மிச்சம். வேறவழி இல்லாம மீண்டும் சாலை ஓரத்திலேயே குடிசை போட்டோம். அதைப் பார்த்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ‘உங்களுக்கெல்லாம் இடம் கொடுத்தாச்சு இல்ல... அங்கபோய் இருங்க. இங்கெல்லாம் குடிசை போடக்கூடாது’னு சொன்னாங்க. அதற்கு நாங்க, ‘இடம் எதுவும் இன்னும் கொடுக்கலை’னு சொன்னோம். அதுக்குப் பிறகுதான் காட்டுல உள்ள இடத்தைக் காட்டினாங்க” என்றார் சோகத்துடன்.

“பாறையில பட்டா... கேள்வி கேட்டா தப்பா?” - வேதனையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்

அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதம், “எங்களுக்குச் சொந்த நிலம் கிடைக்கப் போகுது, கஷ்டம் எல்லாம் தீரப்போகுதுனு 107 குடும்பமும் குழந்தை குட்டிகளைத் தூக்கிக்கிட்டு அதிகாரிங்க பின்னால போனோம். சொரி மலையடிவாரத்துல இருக்கிற பாறைகள் நிறைஞ்ச பகுதிக்கு அழைச்சுட்டுப் போய், ‘இங்கதான் உங்களுக்கு இடம் கொடுக்கப் போறோம்’னு சொன்னதும் எங்களுக்கு ‘திக்’னு ஆயிடுச்சு. அவங்க காட்டினது முழுக்க முழுக்க பாறைகள் நிறைஞ்ச பகுதி. அது மட்டுமல்லாம, அது நீர்வழிப்பாதையும்கூட. மழைக்காலத்துல மலையில பொழியுற மழைத் தண்ணியெல்லாம் அந்தப் பகுதி வழியாத்தான் ஓடிவரும். காட்டு யானைங்க அங்கே அடிக்கடி உலாவும். அங்க போறதுக்கு முறையான பாதையே இல்ல. இன்னொருத்தரோட பட்டா நிலத்துல நுழைஞ்சுதான் போக முடியும். பாறையா இருக்குறதால குடிதண்ணீர் கேள்விக்குறிதான். இதெல்லாம் பார்த்துட்டு, ‘பாறையில பட்டா கொடுத்தா நாங்க எப்படி வாழ முடியும்’னு அதிகாரிங்ககிட்ட கேட்டா, ‘கேள்வியா கேட்குறீங்க... உங்களுக்கு அஞ்சு லட்சம் ரூபா போட்டா இடம் வாங்கித் தர முடியும்? இஷ்டம் இருந்தா இருங்க, இல்லேன்னா கிளம்புங்க’னு சொல்றாங்க” என்றார் கண்ணீருடன்.

“பாறையில பட்டா... கேள்வி கேட்டா தப்பா?” - வேதனையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்கத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சமூகநீதிக் கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம், “க.க சாவடியில் நிலைமை இப்படியென்றால், பேரூரை அடுத்த பச்சாபாளையம் கிராமத்தில் 200 பேருக்குக் கொடுக்கப்பட்ட பட்டாக் களுக்கு இன்றுவரை அரசாங்கம் நிலத்தைக் காட்டவே இல்லை. அதேபோல, ஆலந்துறையை அடுத்த பெருமாள்பதியில் 40 குடும்பங்களுக்கு, ‘இலவச வீட்டுமனை கொடுக்கிறேன்’ என்ற பெயரில் நீர்வழிப் பாதையில் இடம் கொடுத்திருக்கிறார்கள். பின்பு இதைச் சொல்லி நீதிமன்றத்திலும் தடை ஆணை வாங்கியிருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 2,000 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து இடத்தை வழங்காமல், நீர்வழிப் பாதையிலும் பாறையிலும் இடம்கொடுத்து தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏனென்றால், பஞ்சமி நிலங்கள் அத்தனையும் அரசியல் புள்ளிகளின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன” என்றார்.

“பாறையில பட்டா... கேள்வி கேட்டா தப்பா?” - வேதனையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்

இதுகுறித்து மதுக்கரை தாசில்தார், “முதலில் அந்த மக்கள் அப்படி எந்தப் புகாரும் சொல்ல வில்லை. அந்த இடமும் நல்ல இடம்தான்’’ என்று விளக்கம் கொடுத்தார். நாம் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்ததை விவரித்த பிறகு, ‘‘அங்கு இருக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு வேறு இடமோ, குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளோ வழங்க ஆலோசனை நடத்திக்கொண்டிருக் கிறோம்” என்றார் அவசரமாக.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்