Published:Updated:

எங்க ஓட்டு மட்டும் வேணும்... குளத்துல குளிக்கக் கூடாதா?

எங்க ஓட்டு மட்டும் வேணும்... குளத்துல குளிக்கக் கூடாதா?
பிரீமியம் ஸ்டோரி
எங்க ஓட்டு மட்டும் வேணும்... குளத்துல குளிக்கக் கூடாதா?

பொங்கும் பட்டியல் சமூக மக்கள்படங்கள்: பா.பிரசன்னா

எங்க ஓட்டு மட்டும் வேணும்... குளத்துல குளிக்கக் கூடாதா?

பொங்கும் பட்டியல் சமூக மக்கள்படங்கள்: பா.பிரசன்னா

Published:Updated:
எங்க ஓட்டு மட்டும் வேணும்... குளத்துல குளிக்கக் கூடாதா?
பிரீமியம் ஸ்டோரி
எங்க ஓட்டு மட்டும் வேணும்... குளத்துல குளிக்கக் கூடாதா?

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள ஒரத்தூர் கிராமத்தின் பொதுக் குளத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் குளித்ததைத் தொடர்ந்து, எழுந்த பிரச்னையில் ஊரே இரண்டுபட்டுக் கிடக்கிறது. ஆளுங்கட்சியின் நகரச் செயலாளர் ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும் அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மற்றொரு பிரிவினருக்கு ஆதரவாகவும் செயல்படுவதால் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது எனத் தெற்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணிய னிடம் கேட்டோம். “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வம், பிரதீப் ஆகிய இருவரும் சிவன் கோயில் பெரிய குளத்தில் குளித்திருக் கிறார்கள். பின்னர், குளக்கரையில் நிறுத்தப் பட்டிருந்த வேறோர் சமூகத்தைச் சேர்ந்த நபரின் டூ வீலர் கண்ணாடியைப் பார்த்து தலைமுடியைச் சீவியிருக் கிறார்கள். இதைப் பார்த்த அந்த நபர், அவர்களின் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி யிருக்கிறார். இதில்தான் சண்டை ஆரம்பித்தது.

எங்க ஓட்டு மட்டும் வேணும்... குளத்துல குளிக்கக் கூடாதா?

சம்பந்தப்பட்ட டூ வீலரை வைத்திருக்கும் நபரின் உறவுக்காரர்தான் அ.தி.மு.க நகரச் செயலாளரான தங்க கதிரவன். இதனால், அவரின் ஆட்கள் திரண்டுவந்து இரண்டு பேரையும் அடித்து விட்டார்கள். இதைக் கேள்விப் பட்டதும் தெற்குத் தெருவிலிருந்து சிலர், தங்க கதிரவன் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டிருக்கிறார்கள். இதில் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. உடனே, தங்க கதிரவனின் அப்பா தங்கராசன் என்பவர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். இதில் எங்கள் ஆள்கள் மூன்று பேரை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டது போலீஸ். மேலும் பழி வாங்கும் நோக்கத்தில், ஆறு கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்திருக்கிறார்கள். மற்றவர்களைத் தேடுகிறோம் என்று சொல்லி தினமும் போலீஸ்காரர்கள் எங்கள் வீடு புகுந்து மக்களை டார்ச்சர் செய்கிறார்கள்” என்றார்.

இதே ஊரைச் சேர்ந்த இளையராஜா, “இந்தத் தெருவில் வசிக்கும் 100 குடும்பங்களும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவங்கதான். ‘எங்க பசங்க தப்பு செஞ்சிருந்தா, மன்னிப்பு கேட்டுக்கிறோம். இதைப் பெரிசுப்படுத்தி, சாதிக் கலவரமா மாத்திடாதீங்க. சமாதானமா பேசி முடிச்சிக்கலாம்’னு தங்க கதிரவன்கிட்ட பேசினேன். அவர் ஏத்துக்கலை. அமைச்சர் ஓ.எஸ்.மணியன்கிட்ட இருக்கிற செல்வாக்கை வெச்சு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துறார்” என்றார்.

எங்க ஓட்டு மட்டும் வேணும்... குளத்துல குளிக்கக் கூடாதா?

வளர்மதி என்ற பெண், “எங்க சாதிக்காரங்க ஓட்டு மட்டும் வேணும்... ஆனா, பொதுக்குளத்துல குளிக்கக் கூடாதா? இது என்ன நியாயம்? நாங்க வேற கட்சிக்கு மாறப் போறோம்” என்றார்.

இதுபற்றி  தங்க கதிரவனிடம் விளக்கம் கேட்டோம். “குளத்தில் குளித்த பெண்களைப் படம் பிடித்திருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்டதால் சண்டை ஏற்பட்டிருக்கு. இதனால் கும்பலாக வந்து தகராறு செய்ததுடன், எங்கள் வீட்டின்மீது கல்வீசித் தாக்கியிருக்கிறார்கள். சமாதானம் பேசப் போன என் அப்பாவைப் பிடித்துத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அவர்களின் அத்துமீறல்கள் என் வீட்டிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் என் தந்தை புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸாரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தச் சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, பிரச்னை செய்வதே முன்னாள் அமைச்சர் ஜெயபால்தான். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை அவர்தான் தூண்டிவிடுகிறார்” என்றார்.

எங்க ஓட்டு மட்டும் வேணும்... குளத்துல குளிக்கக் கூடாதா?

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயபாலிடம் பேசினோம். “இரண்டு ஆண்டுகளுக்கு முன், கட்சியில் எனக்கு முக்கியப் பதவி  தரப் போகிறார்கள் என்ற செய்தி வெளியானது. அப்போதே என்மீது அவதூறாக, ‘நான் கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றேன்’ என்று புகார் சொன்னார் தங்க கதிரவன். அது உண்மையல்ல என்று காவல் துறையினரின் விசாரணையில் தெரிந்துவிட்டது. இப்போது அ.தி.மு.க-வினர் மீதே பொய் வழக்குத் தொடுத்திருக்கிறார். அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வைத்துக்கொண்டு அதிகாரபோதையில் ஆட்டம் போடுகிறார் அவர். என்னிடம் முறையிட்ட கட்சிக் காரர்களுக்காக, எஸ்.பி-யிடம் ‘உண்மையான குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுங்கள். ஆட்சேபனை இல்லை. ஆனால், கல்லூரியில் படிக்கிற மாணவர் களையும், வழக்கில் சம்பந்தமே இல்லாதவர்களையும்  கைதுசெய்ய முயற்சி செய்வது சரியல்ல’ என்று சொன்னேன். இதில் என்மீது என்ன தவறு இருக்கிறது?” என்றார்.

இதுபற்றி வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியனிடம் பேசினோம். “தங்க கதிரவனின் தந்தை தங்கராசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று முடித்துக்கொண்டார்.

- மு.இராகவன்