Published:Updated:

ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!

ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!
பிரீமியம் ஸ்டோரி
ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!

ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!

ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!

ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!

Published:Updated:
ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!
பிரீமியம் ஸ்டோரி
ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!

யக்குநர் பா.ரஞ்சித், பொது மேடையில் ராஜராஜ சோழனை விமர்சித்துப் பேசிய விவகாரம் வெடித்துக் கிளம்பியிருக்கிறது!

ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!

ஜூன் 5-ம் தேதி, கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ரஞ்சித், ‘‘ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தை ‘பொற்காலம்’ என்பார்கள். ஆனால், அது ‘இருண்ட காலம்’. தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டது, அவருடைய ஆட்சிக் காலத்தில்தான். சாதிரீதியாக ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டதும் அப்போதுதான். 400 பெண்களை விலைமாதர்களாக்கி, தேவதாசி முறையை அமல்படுத்தியதும் கோலார் தங்க வயலுக்கு 26 பேரை விற்றதும் ராஜராஜ சோழன் ஆட்சியில்தான்’’ என்று அனல் கக்கினார். ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் போலீஸில் புகார் கொடுத்தார்கள். தொடர்ந்து ரஞ்சித் மீது கலகம் செய்தல், தூண்டிவிடுதல், சாதி - சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டிவிட முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர் திருப்பனந்தாள் போலீஸார்.

ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!

கோயில் கட்டடக் கலைஞரும் வரலாற்று ஆய்வாளருமான மெய்ம்மன் இதுகுறித்து நம்மிடம், “பெரிய கோயிலை உலகமே வியப்புடன் பார்க்கிறது. கட்டடக் கலையில் சாதனை புரிந்தவர் ராஜராஜன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பெரிய கோயிலே அதற்கு சாட்சி. குடவோலை வாக்கெடுப்பு முறையைக் கொண்டுவந்தவர் அவர்தான். உலகம் முழுவதும் வணிகம் மேற்கொண்டவர் அவர். அவரது ஆட்சிக்குழுவில் அனைத்து தரப்பு மக்களும் இருந்திருக்கிறார்கள். ஆண்டின் முதல் நாளில், ‘ஆட்டைப் பெரிய திருவிழா’வை நடத்தி அதில், முரசுக்குப் பதிலாகப் பறையை இசைக்க வைத்தவர் ராஜராஜன். பறைக்கு ‘திருப்பறையறைவு’ என்று தகுதி கொடுத்தார் அவர். இந்த விஷயம், பெரிய கோயில் கல்வெட்டில் உள்ளது.

பறைச்சேரி, தீண்டாச்சேரி, ஈழச்சேரி ஆகிய சேரிகளில் வாழ்ந்த மக்களுக்கு விவசாய நிலம், வரி வசூலில் பட்டியல் சமூக மக்களுக்கு விலக்கு என்று அள்ளிக்கொடுத்தவர் ராஜராஜன். வரலாறு தெரியாமல் ராஜராஜனை வம்புக்கு இழுக்கிறார் இயக்குநர் ரஞ்சித். ஒரு கலைஞன், கலையின் மூலம்தான் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். இதுபோன்ற தவறான நோக்கத்தில் அல்ல” என்றார் சூடாக.

ராஜராஜ சோழன் vs ரஞ்சித்!

இயக்குநர் ரஞ்சித்தின் கருத்தைத் தெரிந்துகொள்ளப் பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பை அவர் ஏற்கவில்லை. ரஞ்சித் தரப்பில் பேசிய அவரின் வழக்கறிஞர் தாளை.முத்தரசு, “கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய ‘சோழர்கள்’, ‘சுயமரியாதை சமதர்மம்’ என்ற பெரியாரின் உரைகள், வேல்சாமி எழுதிய ‘கோயில் நிலம் சாதி’, குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய ‘தஞ்சாவூர்’, அ.வெண்ணிலா எழுதிய ‘தேவரடியார்’ போன்ற புத்தகங்களில் உள்ள விஷயங்களைத்தான் ரஞ்சித் பேசியிருக்கிறார். சாதி, மதப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பேசவில்லை. இதற்கு முன்பும் பலர் ராஜராஜன் குறித்துப் பேசியிருக்கிறார்கள். ஆனால், அப்போது எல்லாம் விட்டுவிட்டு ரஞ்சித் பேசியதை மட்டும் பெரிதுபடுத்து கிறார்கள்” என்றார்.

- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்