Published:Updated:

`ஐயா, உங்களுக்குப் புண்ணியமா போகும்!' - போலீஸாரிடம் கண்ணீர்விட்ட பெண்கள்

`ஐயா, உங்களுக்குப் புண்ணியமா போகும்!' - போலீஸாரிடம் கண்ணீர்விட்ட பெண்கள்
`ஐயா, உங்களுக்குப் புண்ணியமா போகும்!' - போலீஸாரிடம் கண்ணீர்விட்ட பெண்கள்

``என் வீட்டுக்காரர் குழந்தைகளுக்கு மருந்து வாங்க வச்சிருந்த பணத்தை எடுத்து வந்து குடிக்கிறார். இந்த டாஸ்மாக் கடைகளால் எங்கள் வீட்டில் நிதம் நிதம் பிரச்னை நடக்கிறது. ஐயா உங்களுக்குப் புண்ணியமா போகும் இந்த டாஸ்மாக் கடையை மூடுங்கள்" என்று கிராம மக்கள் போலீஸாரின் காலில் விழுந்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`ஐயா, உங்களுக்குப் புண்ணியமா போகும்!' - போலீஸாரிடம் கண்ணீர்விட்ட பெண்கள்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கடையை மூடிய டாஸ்மாக் நிர்வாகம் பொன்குடிக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலப்பகுதியில் புதிய கடை திறக்க முயற்சி செய்தது.

`ஐயா, உங்களுக்குப் புண்ணியமா போகும்!' - போலீஸாரிடம் கண்ணீர்விட்ட பெண்கள்

அதை அப்பகுதி பெண்கள், போராட்டம் நடத்தி அடித்து உடைத்து மூட வைத்தார்கள். இந்த நிலையில் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து அருகே உள்ள சிறு களத்தூர் கிராமத்தில் அப்போது மக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலத்தில் புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென டாஸ்மாக் கடை முன்பு திரண்டு அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பெண்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு வேறு வழியின்றி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

`ஐயா, உங்களுக்குப் புண்ணியமா போகும்!' - போலீஸாரிடம் கண்ணீர்விட்ட பெண்கள்

அப்போது பேசிய பெண்கள், "மக்களுக்காகத்தானே இந்த அரசாங்கம். மக்களே இந்த டாஸ்மாக் கடை வேண்டாம் என்று சொல்லும்போது எதற்காக இந்தக் கடையை அகற்றாமல் வைத்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து என் கணவர் குடிக்கிறார். தினம் வீட்டில் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். எங்களுடைய வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் அதிகாரிகளுக்குத் துணை போகாதீர்கள். இங்கிருந்து உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கடையைத் துவம்சம் செய்வோம்" என்று எச்சரித்தனர். இதையடுத்து, "மூன்று மாதத்தில் கடையை அகற்றிக்கொள்கிறோம்" என போலீஸார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து  பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

Vikatan