Published:Updated:

பீர் பாட்டிலில் செத்து மிதந்த பாம்பு; அதிர்ந்து போன குடிமகன்

பீர் பாட்டிலில் செத்து மிதந்த பாம்பு; அதிர்ந்து போன குடிமகன்
பீர் பாட்டிலில் செத்து மிதந்த பாம்பு; அதிர்ந்து போன குடிமகன்

பீர் பாட்டிலில் செத்து மிதந்த பாம்பு; அதிர்ந்து போன குடிமகன்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் அரசு மதுபான கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் சிறிய பாம்பு ஒன்று செத்து மிதந்ததால் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

பீர் பாட்டிலில் செத்து மிதந்த பாம்பு; அதிர்ந்து போன குடிமகன்

குளிர்பானங்கள் மற்றும் பீர் பாட்டிலில் வண்டு, கொசு, கரப்பான்பூச்சி, பல்லி ஆகியவைகள் செத்து மிதந்ததாகச் செய்திகள் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதைய்யெல்லாம் மிஞ்சும் அளவிற்கு பீர் பாட்டிலில் பாம்பு செத்து மிதந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

##~~##
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் சூசை இன்னாசி. இவர் மார்க்கெட் தெருவிலுள்ள டாஸ்மாக் கடையில் பாப்புலரான பிராண்டு பீர் ஒன்று வாங்கியுள்ளார். பாட்டிலுடன் சைடிஷ்களை வாங்கி கொண்டு பாருக்குள் சென்றுள்ளார். அங்கே பாட்டிலைத் திறந்து பிளாஸ்டிக் கிளாஸில் ஊற்றும் போது பாட்டிலுக்குள் சிறிய பாம்பு ஒன்று செத்து மிதந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக மீனவர் சூசை இன்னாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகத் தெரிவித்தார்.

இ.கார்த்திகேயன்
அடுத்த கட்டுரைக்கு