Published:Updated:

மதுக்கடைகளை மூடி காந்தியின் கனவை நனவாக்குங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மதுக்கடைகளை மூடி காந்தியின் கனவை நனவாக்குங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்
மதுக்கடைகளை மூடி காந்தியின் கனவை நனவாக்குங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

மதுக்கடைகளை மூடி காந்தியின் கனவை நனவாக்குங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுக்கடைகளை மூடி காந்தியின் கனவை நனவாக்குங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மது ஒழிக்கப்பட வேண்டும் என்ற மகாத்மா காந்தி கனவை நனவாக்கும் விதத்தில், மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் உடனடியாக முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பாக தமிழக அரசின் திட்டமிடல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான 7 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டும் 4.18 லட்சம் விபத்துக்கள் நடந்துள்ளன; இந்த விபத்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சாலை விபத்துக்களில் மொத்தம் 10,642 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து நடப்பதாகவும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாகவும் காவல் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சாலையோர மதுக்கடைகள் தான் சாலை விபத்துக்களுக்கு காரணம் என்பதால் அவற்றை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆணையிட்டது.

##~~##
தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி மீது உண்மையாகவே மரியாதை இருந்தால், மது ஒழிக்கப்பட வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்கும் விதத்தில் மதுக்கடைகளை மூடுவதற்காக உத்தரவில் உடனடியாக கையெழுத்திட வேண்டும்.
அதன்பிறகே, மகாத்மாவின் 144வது நாளான நாளை அவரது சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும். அதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு