Published:Updated:

கூடங்குளம்: பிரதமரை சந்திக்கிறது தமிழகக் குழு!

Vikatan Correspondent
கூடங்குளம்: பிரதமரை சந்திக்கிறது தமிழகக் குழு!
கூடங்குளம்: பிரதமரை சந்திக்கிறது தமிழகக் குழு!

சென்னை, அக்.6,2011


கூடங்குளம் அணு மின்நிலைய விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மாநில நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துடன் போராட்டக் குழுவினர் இன்று டெல்லி செல்கிறது.

கூடங்குளம்: பிரதமரை சந்திக்கிறது தமிழகக் குழு!



கூடங்குளம் போராட்டக் குழுவினர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளரைச் சந்தித்து பிரதமரிடம் அளிக்க இருக்கும் மனு விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக, கூடங்குளம் போராட்ட குழுவினர் இன்று மாலை 6.10 மணிக்கு நிதியாமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

டெல்லியில் நாளை காலை பிரதமரை அவரது அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வலியுறுத்தி மனு அளிக்கின்றனர்.

இந்தக் குழுவில், தமிழக அரசின் உயரதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், கூடங்குளம் போராட்டக் குழுவினர் உள்ளிட்ட 25 பேர் இடம் பெறுகின்றனர்.

முன்னதாக, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடிந்தகரை கிராமத்தில் 127 பேர் 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர். அதற்கு, 10 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் ஆதரவு தெரிவித்து திரண்டனர்.

பின்னர், தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த உறுதியின் காரணமாக, அவர்களது உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்கக் கோரி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அணு மின் நிலையத்தை மூடுவது தொடர்பாக, மத்திய அரசு சார்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாததால் மீண்டும் போராட்டத்தை மேற்கொள்வது என போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.