Published:Updated:

அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: முத்து நாயகம்

Vikatan Correspondent
அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: முத்து நாயகம்
அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: முத்து நாயகம்
அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: முத்து நாயகம்

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாக, மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழுவின் தலைவர் முத்து நாயகம் தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களாக முத்து நாயகம் தலைமையிலான மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆய்வு செய்தது.

அணு உலைப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் பற்றி மூன்று குழுக்களாகப் பிரிந்து அவர்கள் ஆய்வு செய்தனர். இந்தக் குழுவின் ஆய்வுப் பணி நேற்றுடன் நிறைவடைந்தன. பின்னர், அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, அவர்கள் தங்களுடைய அறிக்கையை, நெல்லை மாவட்ட ஆட்சி தலைவரிடம் அளிக்கவுள்ளனர்.

மேலும், போராட்டக்குழுவினர் உள்ளடக்கிய தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவுடன் அவர்கள் இன்று  பேச்சு நடத்துகின்றனர்.

இந்த நிலையில், தங்கள் ஆய்வு குறித்து நிருபர்களிடம் மத்திய குழுவின் தலைவர் முத்து நாயகம் கூறுகையில், "கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்தோம். அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பா இருக்கிறது.

இந்த அணு மின் நிலையத்தைப் பொருத்தவரையில், மக்கள் நலனும் முக்கியம்; அரசின் நலனும் முக்கியம்.

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம்," என்றார் முத்துநாயகம்.

டாக்டர் சாந்தா உறுதி...


மத்திய அரசின் குழுவில் இடம்பெற்றுள்ள சென்னை - அடையாறு புற்றுநோய் மைய இயக்குநர் டாக்டர் சாந்தா கூறுகையில், "கூடங்குளம் அணு மின் நிலையம் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தால் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படாது," என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.