Published:Updated:

மதுவிலக்கிற்காக உயிரை இழக்கவும் தயார்... வைகோ ஆவேசம்!

மதுவிலக்கிற்காக உயிரை இழக்கவும் தயார்... வைகோ ஆவேசம்!
மதுவிலக்கிற்காக உயிரை இழக்கவும் தயார்... வைகோ ஆவேசம்!

மதுவிலக்கிற்காக உயிரை இழக்கவும் தயார்... வைகோ ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை: மதுவிலக்கிற்காக உயிரை இழக்கவும் தயார் என்று கலிங்கப்பட்டி போராட்டத்தில் ஆவேசமாக வைகோ தெரிவித்து உள்ளார்.

மதுவிலக்கிற்காக உயிரை இழக்கவும் தயார்... வைகோ ஆவேசம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இருக்கும் அரசு மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி, ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ம.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள், போலீசாரின் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

மதுவிலக்கிற்காக உயிரை இழக்கவும் தயார்... வைகோ ஆவேசம்!

இதை தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்த முற்பட்டதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டதை கலைத்தனர். அப்போது, செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் மற்றும் நேரடி ஒளிபரப்பு வாகன ஒட்டுனர் படுகாயமடைந்தனர்.
 

மதுவிலக்கிற்காக உயிரை இழக்கவும் தயார்... வைகோ ஆவேசம்!

அதே நேரம், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் காவல் துறையினரின் தடுப்புகளை மீறி டாஸ்மாக் கடையினுள் நுழைந்து மதுபாட்டில்களை தூக்கி வீசி, அவற்றை அடித்து நொறுக்கினர். உடனே தனது கட்சித் தொண்டர்களை அமைதிப்படுத்திய வைகோ, காவல்துறையினரின் தடியடிக்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது, ''மதுவிலக்கிற்காக என் உயிரை இழக்கவும் நான் தயார்" என்று வைகோ கூறினார்.

இதற்கிடையே, போராட்டப்பகுதிக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், வைகோவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது திருமாவளவன் பேசும்போது, ''மக்கள் போராட்டத்தை காவல்துறை சீர்குலைக்க முயல்கிறது. மதுக்கடை உடைக்கப்பட்டதில் தவறில்லை" என்றார்.

அரசு மதுபானக் கடையை அகற்ற கோரி, ம.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்ததால் கலிங்கப்பட்டியில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மதுவிலக்கிற்காக உயிரை இழக்கவும் தயார்... வைகோ ஆவேசம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு