Published:Updated:

'கல்விக் கடவுள்' ஆன தமிழிசை... இது புதுக்கோட்டை கலாட்டா!

'கல்விக் கடவுள்' ஆன தமிழிசை... இது புதுக்கோட்டை கலாட்டா!
'கல்விக் கடவுள்' ஆன தமிழிசை... இது புதுக்கோட்டை கலாட்டா!

'கல்விக் கடவுள்' ஆன தமிழிசை... இது புதுக்கோட்டை கலாட்டா!

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை சரஸ்வதி, லட்சுமி போன்ற கடவுள் வடிவங்களோடு ஒப்பிட்டு பல இடங்களில் பேனர்கள், போஸ்டர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர் புதுக்கோட்டை பாஜகவினர்.
 

'கல்விக் கடவுள்' ஆன தமிழிசை... இது புதுக்கோட்டை கலாட்டா!

புதுக்கோட்டை மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் பி.பாஸ்கரன் என்பவரின் இல்ல புதுமனை விழாவில் பங்கேற்க வந்த தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை சரஸ்வதி, லட்சுமி போன்ற கடவுள் வடிவங்களோடு ஒப்பிட்டு, பல இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, "நாம் அனைவரும் இறையருள் பெற்றவர்கள். அதே நேரம் தொண்டர்கள் ஆர்வ கோளாறு காரணமாக கடவுள் படத்தோடு தலைவர்கள் படத்தை இணைத்து போட்டு விடுகிறார்கள். இது தவறான செயல். எந்த தலைவர்களுடனும் கடவுள் படங்களை இணைக்க கூடாது.

நம்மை கையெடுத்து கும்பிடும் அளவுக்கு நாமே கடவுள் படங்களோடு இணைத்து வெளியிடுவது தவறானது. இது போன்ற செயல்களில் ஒரு போதும் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு