Published:Updated:

தீபாவளி இலக்கை கடந்து மது விற்பனை: டாஸ்மாக்கின் 'வேதனை' சாதனை!

தீபாவளி இலக்கை கடந்து  மது விற்பனை: டாஸ்மாக்கின் 'வேதனை' சாதனை!
தீபாவளி இலக்கை கடந்து மது விற்பனை: டாஸ்மாக்கின் 'வேதனை' சாதனை!
தீபாவளி இலக்கை கடந்து  மது விற்பனை: டாஸ்மாக்கின் 'வேதனை' சாதனை!

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக்கிற்கு ரூ .370 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனையும் தாண்டி டாஸ்மாக்கில் மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது டாஸ்மாக்கில் மது இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. வழக்கத்தை காட்டிலும் பண்டிகை நேரங்களில் அதிகளவில் மது விற்பனையாவது உண்டு. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும் ரூ.372 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கோ ரூ .370 கோடி. அதையும் தாண்டி ரூ .2 கோடி அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்த தீபாவளி பண்டிகையின் போது 8ஆம் தேதியில் இருந்தே டாஸ்மாக்கில் மது விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமையன்று ரூ .113 கோடிக்கும் 9ஆம் தேதியன்று ரூ .108 கோடிக்கும் தீபாவளி பண்டிகையன்று ரூ .151 கோடி என மொத்தம் ரூ .372 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.  இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ .68 கோடி அதிகம் ஆகும்.  கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ .304 கோடிக்கு மது விற்பனை நடந்தது.