Published:Updated:

மின்தடை பிரச்னைக்கு கூடங்குளம் திட்டமே தீர்வு: ஜி.கே.வாசன்

விகடன் விமர்சனக்குழு
மின்தடை பிரச்னைக்கு கூடங்குளம் திட்டமே தீர்வு: ஜி.கே.வாசன்
மின்தடை பிரச்னைக்கு கூடங்குளம் திட்டமே தீர்வு: ஜி.கே.வாசன்
மின்தடை பிரச்னைக்கு கூடங்குளம் திட்டமே தீர்வு: ஜி.கே.வாசன்

தஞ்சாவூர்: தமிழகத்தின் மின் பிரச்னைக்கு, கூடங்குளம் திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமே தீர்வு என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இதுகுறித்து தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், "தமிழகத்தை இருட்டாக்க வேண்டும் என்று நினைக்கும் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும்.

அதற்கான பணிகளை மத்திய, மாநில அரசு விரைந்து செய்யும் என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.

மத்திய அரசு தமிழர்களின் நலனை காக்கும் அரசாக என்றைக்கும் செயல்படும். மத்திய அரசு தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் செயல்படும். அதை தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும்.

தமிழர்களின் நலன் காக்கும் அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. அதில் மாற்றுக்கருத்து இல்லை.

மீனவர்களுக்கு பாதுகாப்பு அவசியம். மத்திய அரசும் தேவையான பாதுகாப்புகளை செய்து கொடுக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த சம்பவங்களில் 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இது வருந்தத்தக்கது. தவறு செய்தவர்களை பிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன," என்றார் ஜி.கே.வாசன்.