Published:Updated:

அதிக விலைக்கு பீர் விற்பதை கண்காணிக்க சிறப்பு படை!

அதிக விலைக்கு பீர் விற்பதை கண்காணிக்க சிறப்பு படை!
அதிக விலைக்கு பீர் விற்பதை கண்காணிக்க சிறப்பு படை!

அதிக விலைக்கு பீர் விற்பதை கண்காணிக்க சிறப்பு படை!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் பீர் விலையை சீர்படுத்திய பிறகும் ஊழியர்கள் அதனை அதிக விலைக்கு விற்கிறார்களா என்பதை கண்காணிக்க சிறப்பு படை  அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக  விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தது.

குளிர்ச்சியான பீர் வேண்டுமானால் கூடுதலாக ரூ.10 முதல் 20 ஊழியர்கள்  வசூலிப்பதாகவும்,இது தவிர பீர் விலை ரூ.65 என்றால் ரூ.70 ஆகவும் ரூ.75  என்றால் ரூ.80 ஆகவும் கூடுதலாக வசூலிப்பதாகவும் புகார் வந்தது.

இதனால் டாஸ்மாக் நிறுவனம் பீர் விலையை சீரமைத்தது.ரவுண்ட் தொகையாக  நிர்ணயம் செய்து அறிவித்தது. இதன் படி ரூ.70, ரூ.80, ரூ.90, ரூ.100 என்ற  விலையில் பீர் வகைகள் தற்போது விற்கப்படுகிறது.

ஆனால் பீர் விலையை ரவுண்டாக சீர்படுத்திய பிறகும் ஊழியர்கள் கூடுதலாக  வசூலிப்பதாக புகார் வந்துள்ள நிலையில்,இதனை கண்காணிக்க சிறப்பு படை  அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு  இன்று முதல் தீவிரமாக கண்காணிப்பு தொடங்கி உள்ளது.அதிக விலைக்கு பீர்  விற்கப்படுகிறதா என்பதை டாஸ்மாக் அதிகாரிகள் ரகசியமாக கண்காணிக்கிறார்கள்.

கூடுதல் விலைக்கு விற்றதாக பிடிபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சரியான தொகை  கொடுத்து பீர் பாட்டில்களை வாங்க வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் கடைக்கு முன்  பகுதியில் புதிய விலைப் பட்டியல் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.அதில் 19  கம்பெனிகளின் பீர் விலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அரசு நிர்ணயித்துள்ள பீர் விலையை விட அதிக விலைக்கு விற்றால் புகார்  தெரிவிக்க வேண்டிய டெலிபோன் எண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த  எண்களுக்கு தொடர்பு கொண்டு எந்த கடையில் அதிக விலைக்கு பீர் விற்கப்படுகிறது  என்று புகார் கூறினால் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு