Published:Updated:

வாக்குமூலம் கொடுக்காத முகிலன்... விலகாத மர்மங்கள்!

முகிலன்
பிரீமியம் ஸ்டோரி
முகிலன்

‘எங்கே முகிலன்?’ என்று ஐந்து மாதங்களாக நிலவிய குழப்பக் கேள்விக்கு விடை கிடைத்து, அவர் நம் கண் முன்னே வந்துவிட்டார்.

வாக்குமூலம் கொடுக்காத முகிலன்... விலகாத மர்மங்கள்!

‘எங்கே முகிலன்?’ என்று ஐந்து மாதங்களாக நிலவிய குழப்பக் கேள்விக்கு விடை கிடைத்து, அவர் நம் கண் முன்னே வந்துவிட்டார்.

Published:Updated:
முகிலன்
பிரீமியம் ஸ்டோரி
முகிலன்

னால், ‘குளித்தலைப் பெண் கொடுத்த பாலியல் வழக்கில் விவரம் என்ன?’ என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. காரணம், அந்த வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலன், ‘‘எனக்கு உடல்நிலையும் மனநிலையும் சரியானதும் வாக்குமூலம் தருகிறேன்’’ என்று சொன்னதுதான்.

கடந்த பிப்ரவரி 15-ம் தேதியன்று காணாமல் போனார் முகிலன். காவல் துறையினர் உள்ளிட்ட பல தரப்பினரும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்ததன் எதிரொலியாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை செய்துவந்தனர். சமூக வலைத்தளங்களில், ‘முகிலன் எங்கே?’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முக்கிய ஆவணங்களை வெளியிட்டதால்தான், அவர் காணாமல் போயிருக்கிறார். அதனால் இந்த விவகாரத்தில் ஆலையின் பின்னணி இருக்கலாம்’ என்றும், ‘காவல்துறை அவரைக் கடத்தியிருக்கலாம்’ என்கிற ரீதியிலும் பரபரப்புப் புகார்கள் முன்வைக்கப்பட்டன.

வாக்குமூலம் கொடுக்காத முகிலன்... விலகாத மர்மங்கள்!

சமூகப்போராளிகள் பலரும் ஆளுக்கொரு திசையாகத் தேடிக்கொண்டிருந்த நிலையில், அவருடன் இணைந்து பலவிதமான போராட்டங் களிலும் பங்கேற்று வந்த குளித்தலைப் பெண் ஒருவர், முகிலன் மீதே பாலியல் புகார் பரபரப்பைப் பற்றவைத்தார். இதையடுத்து முகிலன் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முகிலன் காணாமல் போன பின்பு, இந்த விவகாரம் மறந்தும் போனது. இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில்தான், கடந்த 6-ம் தேதி திருப்பதி ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்ட முகிலனை, சென்னை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மீட்டுக் கொண்டுவந்தனர். ‘24 மணி நேரத்தில், முகிலனை கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்ற எழும்பூர் நீதிபதியின் உத்தரவையடுத்து, 10-ம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் கரூர் ஜே.எம் 2 நீதிபதி விஜய் கார்த்திக் வீட்டில் முகிலனை ஆஜர்படுத்தினர். ஆனால், அங்கேயும் வாக்கு மூலம் கொடுக்காத முகிலன், ‘‘என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள். உயிருக்குப் பாதுகாப்பில்லை. என்னைக் கொல்ல சதி நடக்கிறது. என் உடம்பும் மனசும் சரியானதும் வாக்குமூலம் தருகிறேன்’’ என்று சொன்னார்.

வரும் 24-ம் தேதி வரை முகிலனைத் திருச்சி மத்தியச் சிறையில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதோடு, சிறை மருத்துவ மனையிலேயே முகிலனுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். ஆனால், முகிலனோ, ‘‘அங்கே என்னை ஏதாவது செய்துவிடுவார்கள். திருச்சி ஜி.ஹெச்்-சில் எனக்கு மருத்துவம் பார்க்க வேண்டும். அப்போது, மனைவி பூங்கொடியையும் தோழர்களையும் என்னைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். எனது கோரிக்கைகளை போலீஸ் தட்டிக்கழிக்கும்’’ என்று சொல்ல, ‘‘நீங்கள் கேட்கும் கோரிக்கை அனைத்தும் நிறைவேற உத்தரவிடுகிறேன். போலீஸ் நிறைவேற்றவில்லை என்றால், எனக்கு போன் செய்யுங்கள்’’ என்று தனது தொடர்பு எண்ணை முகிலனிடம் கொடுத்தார் நீதிபதி.

‘‘எனக்கு ஏதாவது ஆனால், விதையாக மாறுவேன். லட்சம் முகிலன்கள் உருவாவார்கள்’’ என்று கோஷம் போட்ட முகிலனை, திருச்சி மத்தியச் சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்ற னர். முகிலன் வாக்குமூலம் கொடுக்கும்போது தான், பல மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்!