Published:Updated:

Amazon இந்திய தேசியக்கொடியை அவமதிக்கிறதா?#Amazon_Insults_National_Flag ஹேஷ்டேக் பின்னணி என்ன?

தேசியக்கொடி பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்கள் ( amazon )

#Amazon_Insults_National_Flag ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Amazon இந்திய தேசியக்கொடியை அவமதிக்கிறதா?#Amazon_Insults_National_Flag ஹேஷ்டேக் பின்னணி என்ன?

#Amazon_Insults_National_Flag ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Published:Updated:
தேசியக்கொடி பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்கள் ( amazon )

சமீபத்தில் ட்விட்டரில், இந்திய தேசிய கொடியை Amazon அமவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்திய தேசிய கொடி அச்சிடப்பட்ட டீ-சர்ட், கப், கீ செயின், சாக்லேட் போன்ற பொருள்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என சிலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகளில், இது விற்பனையை அதிகரிக்க செய்யப்படும் கீழ்மையான செயல் என்றும் இதன் மூலம் தேசபக்தி ஒருபோதும் அதிகரிக்க போவதில்லை எனவும் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். மேலும் சிலர், இது Flag Code of India 2002 சட்டத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பது, "எந்தவித உடைகள் மற்றும் சீருடைகளில் கொடி பயன்படுத்தக்கூடாது. எந்தவித கைகுட்டைகள், நாப்கின் மற்றும் பெட்டிகள் மீது தைக்கப்படவோ பொறிக்கவோ கூடாது"

amazon, twitter
amazon, twitter

விதிகளை மீறியுள்ள பொருட்களைப் பட்டியலிட்டிருக்கும் விற்பனையாளர்கள் மீது இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமேசான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றச்சாட்டு அமேஸான் மீது எழுவது முதல் முறை அல்ல. 2017 -ம் ஆண்டு அமேசானின் கனடா விற்பனை தளத்தில், இந்திய தேசிய கொடி பதிக்கப்பட்ட வாசல் விரிப்பு (Doormat) விற்பனைக்கு இருந்தது. பலத்த எதிர்ப்புக்கு பிறகு அதனை அமேஸான் நீக்கியது. குடியரசு தினக் கொண்டாட்டம் ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்தச் செய்தி ட்விட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism