Published:Updated:

மருத்துவம் பார்க்க அழைத்துச் சென்று கட்டாய திருமணம்; கால்நடை மருத்துவரை கதறவிட்ட பெண் வீட்டார்!

கட்டாய திருமணம்

தகுதியான இளைஞரைக் கடத்திக்கொண்டு வந்து வீட்டிலுள்ள பெண்ணுக்கு பாரம்பர்ய முறைப்படி திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ, தப்பி ஓட முயன்றாலோ மணமகளின் குடும்பத்தினர் என்ன செய்வார்களோ... என்ற பயத்திலேயே மணமகனின் திருமணம் முடிந்துவிடும்.

மருத்துவம் பார்க்க அழைத்துச் சென்று கட்டாய திருமணம்; கால்நடை மருத்துவரை கதறவிட்ட பெண் வீட்டார்!

தகுதியான இளைஞரைக் கடத்திக்கொண்டு வந்து வீட்டிலுள்ள பெண்ணுக்கு பாரம்பர்ய முறைப்படி திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ, தப்பி ஓட முயன்றாலோ மணமகளின் குடும்பத்தினர் என்ன செய்வார்களோ... என்ற பயத்திலேயே மணமகனின் திருமணம் முடிந்துவிடும்.

Published:Updated:
கட்டாய திருமணம்

கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) படத்தில், எங்கோ சுற்றிக்கொண்டிருக்கும் தனுஷை திடீரென பிடித்துக்கொண்டு வந்து, வீட்டுக்கு அடங்காமல் சுற்றிக்கொண்டிருக்கும் சாரா அலிகானுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். மணமகனுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது... இந்தக் காட்சிகளை திரையில்தான் பார்த்திருப்போம். ஆனால், நிஜத்திலும் இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன என்பதுதான் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

கடத்திவரப்பட்ட மணமகன் திருமணத்துக்கு விருப்பமில்லாமல் எதிர்ப்பு தெரிவித்தாலோ, தப்பி ஓட நினைத்தாலோ அவ்வளவுதான். மணமகளின் குடும்பத்தினர் என்ன செய்வார்கள்? என்பதை நினைத்துப் பார்த்தால்... அந்த பயத்திலேயே மணமகனின் திருமணங்கள் நடந்து முடிந்துவிடும்.

திருமணங்கள்
திருமணங்கள்

இதுபோன்ற கட்டாய திருமணங்கள் பீகார் மாநிலத்தில் இன்றளவும் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் வரதட்சணை கொடுக்க விரும்பாத மணமகள் குடும்பத்தினர் துணிந்து இத்தகைய திருமணங்களை செய்து வருகிறார்களாம். தங்கள் பெண்ணுக்கு ஏற்ற தகுதியான இளைஞர்களைக் கடத்திக் கொண்டு வருவதுடன், பாரம்பர்ய முறைப்படி அவர்கள் வீட்டிலுள்ள பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கமாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படி ஒரு கடத்தல் கட்டாய திருமணம் பீகார் மாநிலம், பேகூசராய் (Begusarai) மாவட்டத்தில் சமீபத்தில் நடந்தது. அங்கு கால்நடை மருத்துவராகப் பணிசெய்பவர் சத்யம் குமார். ஹஸன்பூர் கிராமத்தில் உள்ள விஜய் சிங் இவரை கால்நடை களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்து வந்துள்ளார். வந்த பின்னர்தான் அவர் கடத்தி வரப்பட்ட உண்மை அவருக்கே தெரிந்தது.

இப்படி மணமகனாகக் கடத்தப்பட்ட கால்நடை மருத்துவரை, ஒரு பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். கால்நடை மருத்துவர் சத்யமும் அப்பெண்ணும் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது. அதில் மணமகன் பயத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. எதிர்த்தால் `வாயிலேயே வெட்டு விழுமோ' என்ற பயத்தில்தான் அப்பெண்ணின் கையை சத்யம் பிடித்துள்ளார் எனப் பரபரப்பாகப் பேசுகின்றனர்.

கட்டாய திருமணம்
கட்டாய திருமணம்

இப்படி வன்முறையாக நடைபெற்ற இந்தத் திருமணம் குறித்து கால்நடை மருத்துவரின் தந்தை, தெக்ரா போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்தத் திருமணம் விருப்பப்பட்டு நிகழ்ந்ததா அல்லது கட்டாயத்தின் பேரில் நிகழ்ந்ததா என்பது குழப்பமாகவே உள்ளது. இருந்தபோதிலும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

``பீகாரின் பேகூசராய் மாவட்டத்தில் 1970-ம் ஆண்டிலிருந்தே கட்டாய திருமணங்கள் (Pakadua vivah) தொடர்கின்றன. பிறகு, இவ்வகை திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. கால்நடை மருத்துவரின் தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கை பல கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்" என பேகூசராய் மாவட்டத்தின் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism