Published:Updated:

``பயமா இருக்குங்க!''- பஞ்சாயத்துத் தலைவர் செல்வியை அச்சுறுத்தும் சாதி ஆதிக்கம்

செல்வி
செல்வி

இதுபோன்ற கொடுமைகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னமும் பரவலாகத் தொடரத்தான் செய்கின்றன என்ற பகீர் தகவல்கள் நம்முன் கொட்டிக்கிடந்தன. அவற்றுள் சில...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் செல்வி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். பஞ்சாயத்துத் தலைவர் ஆவதற்கு முன்பு கணவருடன் மின் மயானத்தில் பிணம் எரிக்கும் வேலை பார்த்துவந்துள்ளார்.

செல்வி பஞ்சாயத்துத் தலைவரானதை ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் குப்புசாமி விரும்பவில்லை. தொடர்ந்து குடைச்சல் கொடுத்து மிரட்டியும், சாதியைச் சொல்லி அசிங்கப்படுத்தியும் வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செல்வியை குப்புசாமி அடிக்க முயல, பி.சி.ஆர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.

தட்சிணாமூர்த்தி - சரிதா - செல்வி
தட்சிணாமூர்த்தி - சரிதா - செல்வி

பஞ்சாயத்துத் தலைவர் செல்வியிடம் பேசினோம். "குப்புசாமி சொல்றதுல நான் கையெழுத்து போடணும். சட்ட விரோதமா அவர் என்ன செய்யச் சொன்னாலும் செஞ்சு, அதுக்கு நான் ஒத்துழைப்பு கொடுக்கணும்னு நினைப்பாரு. அதை நான் செய்ய மாட்டேன்னு சொன்னா பிரச்னை பண்ணுவாரு. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவ நம்மை ஆட்சி செய்யறாளே அப்படிங்கிறதை அவரால ஏத்துக்க முடியலை.

ஆறு மாசத்துக்கு முன்னாடி என்னை சாதியைச் சொல்லி, அடிக்க வந்துட்டாரு. அவர் மேல பி.சி.ஆர் கேஸ் கொடுத்தேன். போலீஸ் கைது பண்ணி 40 நாள் ஜெயில்ல போட்டாங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் ரிலீஸ் ஆகியிருக்காரு. நேரடியா அவர் என்கிட்ட பேசலைன்னாலும், 'பி.சி.ஆர் கேஸை வாபஸ் வாங்கு. எதுவா இருந்தாலும் பேசி முடிச்சிக்கலாம்'னு ஆள் வெச்சி மிரட்டிக்கிட்டு இருக்காரு. எந்நேரமும் பயமா இருக்குங்க!" என்றார்.

- இது சாம்பிள்தான்.

ஒரு தலித் இந்தியாவின் குடியரசுத்தலைவராகக்கூட ஆக முடியும். ஆனால் ஊராட்சித்தலைவராக ஆவதோ அப்படியே ஆனாலும் சுயமரியாதையுடன் சுதந்திரமாக இயங்குவதோ கடினம். கே.ஆர்.நாராயணன் குடியரசுத்தலைவராக இருந்த காலத்தில்தான் மேலவளவில் முருகேசன் என்ற தலித் ஊராட்சித் தலைவர் ஆதிக்கச்சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு தலித். ஆனால் இந்தியாவில் தலித் ஊராட்சித்தலைவர்கள் சமமாக நடத்தப்படுவதில்லை என்பதற்குத் தமிழகத்திலேயே இரண்டு சமீபத்திய உதாரணங்கள்.

அமிர்தம்
அமிர்தம்

திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவி அமிர்தத்தை சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்த கொடுமையும், கடலூர் மாவட்டம் தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி ஆதிக்க சாதியினருக்கு முன் தரையில் உட்கார வைக்கப்பட்ட சம்பவமும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதுபோன்ற கொடுமைகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னமும் பரவலாகத் தொடரத்தான் செய்கின்றன என்ற பகீர் தகவல்கள் நம்முன் கொட்டிக்கிடந்தன. அவற்றுள் சில...

> ``கீழே உட்காரச் சொல்லி மிரட்டுறாங்க!" | ``அவ்வளவு திமிரால உனக்கு?" | சாதிக்கு மரியாதை! | பதவி இருந்தும் நாற்காலி இல்லை! | ``செருப்பைக் கழட்டி அடிக்க வந்தாங்க!" |``நீ சேர்ல உட்காரக்கூடாது!"

- இந்த பகீர் தகவல்களை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > ஜனநாயகத்தை மதிக்காத சாதி ஆதிக்கம்! https://bit.ly/3mbcraS

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு