Published:Updated:

`கவரைப் பிரித்தேன்; மாத்திரைக்குள் இரும்புக் கம்பி!' - கோவை இளைஞர் அதிர்ச்சி

கோவையில் மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய மாத்திரையில், இரும்பிக் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாத்திரையில் இரும்புக் கம்பி
மாத்திரையில் இரும்புக் கம்பி

கோவை, கரும்புகடையைச் சேர்ந்தவர் முஸ்தபா (24). கார் சீட் கவர் போடும் கடையில் பணியாற்றி வருகிறார். பல் வலியால் அவதிப்பட்ட முஸ்தபா, அதே பகுதியில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்கியுள்ளார்.

மாத்திரை
மாத்திரை

இந்நிலையில், மாத்திரை வாங்கியபோது, அதில் இரும்புக் கம்பி இருப்பதைக் கண்டு முஸ்தபா அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து முஸ்தபா கூறுகையில், “நேற்று காலை முதல் கடுமையான பல் வலி இருந்தது. இதனால், அருகில் இருந்த மெடிக்கலில் மாத்திரை வாங்கினேன். மாத்திரை எடுத்துக் கொள்வதற்காக, கவரை பிரித்தபோதுதான், அதில் இரும்புக் கம்பி ஒன்று இருப்பதைப் பார்த்தேன்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் ஆலோசனை செய்த பிறகு, அந்த மெடிக்கல் நிர்வாகத்திடம் கேட்டோம். அவர்கள் `இது கம்பெனியின் தவறு. சிரமத்துக்கு வருந்துகிறோம். உங்களுக்கு முழு ஒத்துழைப்புத் தருகிறோம்’ என்று உறுதியளித்துள்ளனர்.

மாத்திரையில் இரும்புக் கம்பி
மாத்திரையில் இரும்புக் கம்பி

இதுகுறித்து சுகாதாரத்துறையிலும் புகார் அளிக்க உள்ளோம். எளிய மக்கள் அவசரத் தேவைக்கு மெடிக்கல் கடைகளைத்தான் அணுகுவார்கள். கம்பெனிகளின் அலட்சியத்துக்கு, நாங்கள் தண்டனை அனுபவிக்க முடியாது. சம்பந்தப்பட்ட கம்பெனி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.