எத்தனை பேருக்கு நீங்கள் பயன்படுத்தாத மின்சாரத்துக்கும் சேர்த்து கட்டணம் செலுத்துகிறீர்கள் என்பது தெரியும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் உபயோகிக்காத மின்சாரத்துக்கு பணம் செலுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்க நம்பலைன்னாலும் அதான் நிஜம்.
அதெப்படி! உபயோகிக்காத மின்சாரத்துக்கு நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கேட்கலாம். ஆனால், நீங்கள் உங்களின் வீட்டில் பயன்படுத்தாத மின்சாரத்துக்கும் சேர்த்தே பணம் காட்டுகிறீர்கள் என `சிட்டிசன் கன்சியூமர் ஆண்ட் சிவிக் ஆக்சன் குழு (Citizen consumer and civic Action Group) நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருவள்ளூர், கடலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், சென்னை போன்ற மாவட்டங்களில் சுமார் 400-லிருந்து 450-க்கும் மேற்பட்ட வீடுகளில் இக்குழுவினரால் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 70 சதவிகிதம் பேர் வீடுகளில் மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்யாமல், தொடர்ச்சியாக மின்சாரத்தை வீணாக்கியது தெரிய வந்தது.
இது குறித்து இவ்வமைப்பில் ஆராய்ச்சியாளராக இருக்கும் எம். கே.பாலாஜியிடம் பேசினோம்...
அவர் கூறுகையில், ``மின்சாரத்தால் இயங்கும் கருவிகளை வெறும் ரிமோட் மூலமாக மட்டும் ஆஃப் செய்துவிட்டு, அதன் மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்யாமல், இருந்தால் தொடர்ந்து மின்சாரம் வீணாகும், இதற்கு Stand by loss என்று பெயர். ரிமோட் மூலமாக மட்டும் ஆஃப் செய்யும்போது, இந்த உபகரணங்கள் தொடர்ந்து 5 வாட் மின்சாரத்தை எடுத்துக்கொண்டே இருக்கும். டிவி, செட் ஆஃப் பாக்ஸ், ஏர் கண்டிஷனரின் ஸ்டெபிளைசர், வாட்டர் ஹீட்டர், சார்ஜர் என வீட்டு உபயோகப் பொருள்களில் எல்லாம் இப்படி மின்சாரம் வீணாகிறது.
இதில் டிவி மற்றும் செட் ஆஃப் பாக்ஸ்தான் அதிகப்படியான மின்சாரத்தை வீணாக்கும். பொதுவாக பெரும்பாலானவர்களின் வீட்டில், டிவி, செட் ஆஃப் பாக்ஸ், ஹோம் தியேட்டர், சார்ஜர் மற்ற உபகரணங்கள் என அனைத்தையும் இணைக்க ஒரு எஸ்டென்ஷன் கேபிள் வைத்து இருப்பார்கள். அந்த ஒரு ஸ்விட்சை மட்டும் எப்போதும் ஆஃப் செய்யவே மாட்டார்கள்.

உதாரணத்துக்கு, இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை அந்த ஸ்விட்சை ஆஃப் செய்யாத பட்சத்தில், மின்சாரம் வீணாகி கொண்டே இருக்கும். அதைக் கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு 7.2 வாட்ஸ் மின்சாரம் செட் ஆஃப் பாக்ஸால் மட்டுமே வீணாகிறது.
சிறிய எண்ணிக்கைதானே என எண்ணாமல், இப்படி வீடு, அப்பார்ட்மென்ட், சமூகம் என சிந்தித்தால் இது ஒரு பெரிய விஷயமந்த் தெரியும். இதை மிகவும் எளிமையாக எடுத்துக் கொள்ளாமல், ஒவ்வொருவரின் தனி நபர் கடமையாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்" எனக் கூறினார்.