Published:Updated:

ஈஷாவின் `கூக்குரல்' சர்ச்சை: 242 கோடி மரங்கள் நடுவதற்கு நிலம் எங்கே?

மருத நிலப் பகுதியில் வேளாண்மைதான் முக்கிய தொழிலாக இருக்கிறது. இங்குதான் இவர்கள் மரம் வளர்ப்பை முன்னெடுக்கிறார்கள். இது முற்றிலும் முரணானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவிரி நதியைச் சீரமைக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் 'காவிரி கூக்குரல்' என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் 'ஈஷா' நிறுவனர் ஜக்கி வாசுதேவ். தலைக்காவிரியிலிருந்து சென்னை வரை இருசக்கரப் பேரணியாகச் சென்று, இதுதொடர்பாகப் பிரசாரம் செய்கின்றனர். "கர்நாடகம், தமிழகத்தில் உள்ள காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில், அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என ஈஷா அமைப்பினர் தெரிவிக்கின்றனர். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2kRTboz

இந்த நிலையில், 'காவிரி கூக்குரல்' அமைப்பு தொடங்கப்பட்டதன் பின்னணியில், பன்னாட்டு நிறுவனங்கள், மத்திய-மாநில அரசாங்கங்கள் இருக்கின்றன என, சமூக ஆர்வலர்கள் மத்தியில் விவாதம் அனல் பறக்கிறது.

பழந்தமிழரின் நீர் மேலாண்மை, நில மேலாண்மை பற்றிய ஞானம் அவருக்கு இல்லை.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய 'தண்ணீர்' இயக்கத்தைச் சேர்ந்த வினோத்ராஜ் சேஷன், ''காவிரியின் வடிநிலப் பகுதியில் 242 கோடி மரங்களை நடவுசெய்வதாகச் சொல்கிறார்கள். ஒட்டுமொத்தமாக காவிரியின் வடிநிலப் பகுதி எனப் பார்க்கும்போது 81,155 சதுர கிலோமீட்டர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 44,016 சதுர கிலோமீட்டர் வருகிறது. இதுதான் வடிநிலப் பகுதி. இதில் மலைப் பகுதி, சமவெளிப் பகுதி, டெல்டா பகுதிகள் உள்ளடங்கும். புஞ்சை, நஞ்சை, தரிசு, புறம்போக்கு, வீடுகள், பாறைகள், சாலைகள் அனைத்தும் அடங்கும். இத்தனைக்கும் இடையில் 242 கோடி மரங்கள் நடுவதற்கான நிலம் இருக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. இது, முழுக்க கூகுளைப் பார்த்து கம்ப்யூட்டரில் போட்ட கணக்கு. இதில் ஒரு மரத்துக்கு 42 ரூபாய் என்றரீதியில் நன்கொடையாக வசூலிக்கின்றனர்.

பழந்தமிழரின் நீர் மேலாண்மை, நில மேலாண்மை பற்றிய ஞானம் அவருக்கு இல்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்களைப் பிரித்துவைத்தார்கள் தமிழர்கள். குறிஞ்சி, முல்லை ஆகியவை மரங்கள் இருக்க வேண்டிய பகுதிகள். மருத நிலப் பகுதியில் வேளாண்மைதான் முக்கிய தொழிலாக இருக்கிறது. இங்குதான் இவர்கள் மரம் வளர்ப்பை முன்னெடுக்கிறார்கள். இது முற்றிலும் முரணானது.

காவிரி கூக்குரல்
காவிரி கூக்குரல்

இதன் பின்னணியில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு இருக்க வாய்ப்பிருக்கிறது. எத்தனை ஏக்கரில் விவசாயம் நடக்கிறது என்பதன் அடிப்படையில்தான் கர்நாடக அரசு தண்ணீர் கொடுக்கிறது. காவிரிப் படுகையில் வேளாண் காடுகள் அதிகமானால், விவசாயப் பரப்பு குறையும். அதை காரணம் காட்டி நீதிமன்றம் போய், தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவை கர்நாடகா குறைக்கவும் வாய்ப்பிருக்கிறது'' என்றார் அவர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஈஷா தரப்பில் விளக்கத்தை, ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையில் முழுமையாக வாசிக்க > களத்தில் கூக்குரல்... கலக்கும் எதிர்க்குரல்! - புதிய சர்ச்சையில் ஈஷா... https://www.vikatan.com/news/controversy/isha-yoga-under-a-new-controversy-regarding-cauvery-river-campaign

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு