Published:Updated:

சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளி... குடிபோதையில் அடித்த மருத்துவர்... வலுக்கும் கண்டனங்கள்!

நோயாளியை மருத்துவர் அடிக்கும் சம்பவம்!

இவரின் தாய் சுக்மதிக்கு திடீரென இரவு உடல்நலம் குன்றிவிட, பதறிப்போன ஷியாம் உடனடியாக 108 மற்றும் 112 ஆகிய அவசர மருத்துவ உதவி எண்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளி... குடிபோதையில் அடித்த மருத்துவர்... வலுக்கும் கண்டனங்கள்!

இவரின் தாய் சுக்மதிக்கு திடீரென இரவு உடல்நலம் குன்றிவிட, பதறிப்போன ஷியாம் உடனடியாக 108 மற்றும் 112 ஆகிய அவசர மருத்துவ உதவி எண்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

Published:Updated:
நோயாளியை மருத்துவர் அடிக்கும் சம்பவம்!

தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளியை, குடிபோதையில் இருந்த மருத்துவர் அடித்த சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

call
call
pixabay

சத்தீஸ்கர் மாநிலம் கோப்ரா மாவட்டம் ஜெர்வானி கிராமத்தில் வசித்து வருபவர் ஷியாம் குமார். இவரின் தாய் சுக்மதிக்கு திடீரென இரவு உடல்நலம் குன்றிவிட, பதறிப்போன ஷியாம் உடனடியாக 108 மற்றும் 112 ஆகிய அவசர மருத்துவ உதவி எண்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

ஆனால், அவர்கள் வர நேரமாகும் என்று அறிவித்துள்ளனர். தாயின் நிலையைக் கண்டு தாளமுடியாமல் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

அங்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர், சிகிச்சையின்போது சுக்மதியை அடித்துள்ளார். இதைப் பார்த்ததும் பதறிப் போன மகன், அதைத் தடுக்க முயன்றதற்கு `அமைதியாக இரு’ என அதட்டி உள்ளார். மருத்துவம் பார்க்கும்போது அவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

சிகிச்சை | மாதிரிப்படம்
சிகிச்சை | மாதிரிப்படம்
Image by tomwieden from Pixabay

இந்நிலையில், தன்னிடம் சிகிச்சை பார்க்க வந்த பெண்ணை மருத்துவர் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, மருத்துவருக்குக் கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் அவினாஷ் மேஷ்ராம் கூறுகையில், ``இந்தச் சம்பவம் என்னுடைய கவனத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து அந்த மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது, அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.