Election bannerElection banner
Published:Updated:

ராணிப்பேட்டை: நீர் மாதிரி சேகரிப்பு! - ரசாயன ஆலைகளில் அதிரடி காட்டிய நிபுணர்குழு

ரசாயனத் தொழிற்சாலையில் ஆய்வு
ரசாயனத் தொழிற்சாலையில் ஆய்வு

ராணிப்பேட்டையில், அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.

ராணிப்பேட்டை பகுதியிலுள்ள ரசாயனத் தொழிற்சாலைகளால் நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் விஷமாக மாறும் தன்மையை எட்டியிருக்கின்ற. இது தொடர்பாக, சென்னையில் இயங்கிவரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியிருக்கிறது. ராணிப்பேட்டையில், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காகப் பல துறை நிபுணர்கள் அடங்கிய குழுவையும் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்திருக்கிறது.

நீர் மாதிரி சேகரிப்பு
நீர் மாதிரி சேகரிப்பு

இந்தக் குழுவில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் சார்பில் சப் கலெக்டர் இளம்பகவத், மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அலுவலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், சிப்காட் திட்ட அலுவலர், தொழிற்சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குநர், பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர்வளப் பொறியாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டேங்கர் லாரியில் ரசாயனக் கழிவுநீர்! - ராணிப்பேட்டை தொழிற்சாலை மீது அதிரடி நடவடிக்கை

ராணிப்பேட்டை சிப்காட்டில், அதிக மாசுபடுத்தும் சிவப்பு வகைப்பாடு தொழிற்சாலைகளில் நேற்றும் இன்றும் நிபுணர்குழு ஆய்வு நடத்தியிருக்கிறது.

மூன்றாவது நாளாக நாளையும் ஆய்வு செய்கிறார்கள். மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்தின் யூனிட் 1 மற்றும் யூனிட் 3 ஆகிய இரண்டு தொழிற்சாலைகள், அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கான இரண்டு மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சுவிட்ஸ் லேப், அர்ஜுன் கெமிக்கல் ஆகிய தொழிற்சாலைகளில் நிபுணர்குழு ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.

ரசாயனத் தொழிற்சாலையில் ஆய்வு
ரசாயனத் தொழிற்சாலையில் ஆய்வு

மேற்கண்ட அந்தத் தொழிற்சாலைகளிலிருந்து, சட்ட விரோதமாக கழிவுநீர், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் திறந்துவிடப்படுகிறதா? டேங்கர் லாரிகளில் ரசாயனக் கழிவுகளை ஏற்றிச் சென்று வெளியில் விடுகிறார்களா என்பதைக் கண்டறியவும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. சோதனை முடிவு மற்றும் ஆய்வறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தீர்ப்பாயம் அளிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும் என்று நிபுணர்குழு தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு