Published:Updated:

கொள்ளை வட்டி, ஆபாசப்பட மிரட்டல்... 100 சீன மோசடி ஆப்கள் முடக்கம்... ஏன் இந்த அதிரடி நடவடிக்கை?

Loan (Representational Image)

ஆப்களை டவுன்லோடு செய்யும்போதே வாடிக்கையாளரின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களின் தரவுகளைப் பெற அனுமதி கேட்கும். இவை அனைத்துக்கும் சம்மதம் அளிக்கப்படும் பட்சத்தில், அந்த நபர் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் சீனாவின் சர்வர்களுக்குச் சென்றுவிடும்.

கொள்ளை வட்டி, ஆபாசப்பட மிரட்டல்... 100 சீன மோசடி ஆப்கள் முடக்கம்... ஏன் இந்த அதிரடி நடவடிக்கை?

ஆப்களை டவுன்லோடு செய்யும்போதே வாடிக்கையாளரின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களின் தரவுகளைப் பெற அனுமதி கேட்கும். இவை அனைத்துக்கும் சம்மதம் அளிக்கப்படும் பட்சத்தில், அந்த நபர் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் சீனாவின் சர்வர்களுக்குச் சென்றுவிடும்.

Published:Updated:
Loan (Representational Image)

கடன் இல்லாமல் இன்றைக்கு யாராலும் காலம் தள்ள முடியாது என்பது உண்மைதான். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் ஏதோ ஒரு அவசரத் தேவை வந்து மக்களைக் கடன் வலையில் சிக்க வைத்துவிடுகிறது. மக்களின் இந்த அவசர, அவசியத் தேவையை உணர்ந்த ஆன்லைன் நிறுவனங்கள், கடன் தந்து, கொள்ளை வட்டி வசூலித்து வருகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ இந்தக் கொள்ளை வட்டிக் கும்பலிடம் சிக்கி, மக்கள் படாதபாடு படுகின்றனர்.

debt
debt

இப்படிக் கொள்ளை அடிக்கும் நிறுவனங்கள் நம்மூர் நிறுவனமாக இருந்தாலும் பரவாயில்லை, புகார் செய்து பிடித்துவிடலாம். ஆனால், இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த மோசடிக் கும்பல் எனத் தெரியவரும்போது, அவர்கள் அடையும் ஏமாற்றம் அளப்பரியது.

அப்படித்தான் சீனாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று `குறைந்த வட்டிக்கு உடனடிக் கடன்' எனவும், `90 நாள்கள் வட்டியில்லை' எனவும் ஆன்லைனில் சீன ஆப் மூலமாக விளம்பரம் செய்து பல ஆயிரக்கணக்கானவர்களை ஏமாற்றியுள்ளது. இதை நம்பிக் கடன் வாங்கி மோசம் போன மக்கள் அதில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு லோன் வழங்கிய பின்னர், அதிக அளவு வட்டியைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்தித்து கொடுமை செய்துள்ளன இந்த நிறுவனங்கள்.

அதுமட்டும் இல்லாமல், ரூ.5,000 முதல் ரூ.10,000 எனக் குறைந்த அளவுக்கு லோன் வாங்கியவர்கள்கூட, லட்சக் கணக்கில் தொகையை செலுத்த வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆப்-களை டவுன்லோடு செய்யும்போதே வாடிக்கை யாளரின் தொடர்பு எண்கள் மற்றும் புகைப்படங்கள், மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களின் தரவுகளைப் பெற அனுமதி கேட்கும். இவை அனைத்துக்கும் சம்மதம் அளிக்கப்படும் பட்சத்தில், அந்த நபர் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் சீனாவின் சர்வர்களுக்கு சென்றுவிடும்.

Spam Calls (Representational Image)
Spam Calls (Representational Image)

இன்னொரு பக்கம் மோசடியைச் சேர்ந்த மற்றொரு டீம், லோன் வாங்கிய அடுத்த நாளில் இருந்தே அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு வெவ்வெறு தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு பணத்தைத் திரும்பத் தருமாறு வற்புறுத்தும். லோன் வாங்கியவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து, அவர் குடும்பத்தார், நண்பர்களுக்கு அனுப்பி அதிக பணம் தரச் சொல்லி மிரட்டல் விடும்.

இந்தக் கும்பலால் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏமாற்றப்பட்ட மக்கள் மூலம் பெறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட புகார்கள் தேசிய சைபர் க்ரைமில் பதிவானது.

அதைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து களத்தில் செயல்பட்ட டெல்லி போலீஸார், சீன லோன் ஆப் தொடர்பாக 22 நபர்களைக் கைது செய்தனர். இவர்கள் மூலம் செயல்படுத்தப்பட்ட 100 பொய்யான லோன் ஆப்கள் முடக்கப்பட்டன.

இந்த ஆப்கள் அனைத்தும் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்கள் மூலம் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, ஜிக்சியா ஜாங் மற்றும் லூ ராங் என்ற சீனர்கள் இந்த நிதி மோசடியை தலைமை தாங்கி நடத்தியுள்ளனர்.

fraud
fraud

இது குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் கே.பி.எஸ் மல்கோத்ரா பத்திரிகையாளர்களிடம் பேசினார். ``இந்த வழக்கு தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த 100-க்கும் மேற்பட்ட சீன மோசடி ஆப்களைக் கண்டறிந்து முடக்கியுள்ளோம். 51 செல்போன்கள், 25 ஹார்டு டிஸ்க்குகள், 9 மடிக்கணினிகள், 19 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், 3 கார்கள், 4 லட்சம் ரூபாய் போன்றவற்றை இவர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளோம்.

அதோடு மோசடி செய்த சீன மோசடிக் கும்பலின் பாஸ்போர்ட் விவரங்கள் எங்களிடம் உள்ளதால், அதை வைத்து மற்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

இனி ஆப்மூலம் கடன் வாங்குபவர்கள் உஷாராக இருப்பது மிக மிக நல்லது!