Published:Updated:

ஹரித்வார் சர்ச்சை பேச்சு: இந்து மதத் துறவி நர்சிங்கானந்தை கைது செய்தது போலீஸ்!

ஹரித்வார் சர்ச்சை பேச்சு

ஹரித்வாரில், இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக இந்து மதத் துறவி,யதி நர்சிங்கானந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரித்வார் சர்ச்சை பேச்சு: இந்து மதத் துறவி நர்சிங்கானந்தை கைது செய்தது போலீஸ்!

ஹரித்வாரில், இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக இந்து மதத் துறவி,யதி நர்சிங்கானந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
ஹரித்வார் சர்ச்சை பேச்சு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், கடந்த மாதம் 17 முதல் 19-ம் தேதி வரை 'தர்ம சன்சத்' என்ற பெயரில் இந்து மத மாநாடு நடைபெற்றது. பா.ஜ.க தலைவர்கள் அஸ்வினி உபாத்யாய், உதிதா தியாகி உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், மனிதனைப் படுகொலை செய்வது, குடியுரிமையைப் பறிப்பது, சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்து பெரும்பான்மை ஆதிக்கத்தைக் காட்டுவது போன்ற பிற்போக்கு கருத்துகள் முன்வைத்துப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் இந்த மத வெறுப்பு பேச்சுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், ஐ.ஐ.எம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது போன்ற வெறுப்பு பிரசாரங்கள் சமூகத்தின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர். இந்த மாநாட்டில், இந்து மத துறவியான யசி நர்சிங்கானந்த் என்பவர், ``2029-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமர் ஒரு இஸ்லாமியராக இருப்பார். அவ்வாறு நிகழ்ந்தால் என்ன நடக்கும், இஸ்லாமியரின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். ஆட்சி இஸ்லாமியர்களின் கையில் கிடைத்தால், 20 ஆண்டுகளில் 50 சதவிகித இந்துக்கள் மதம் மாற்றப்படுவார்கள், 40 சதவிகித இந்துக்கள் கொலை செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் 10 சதவிகிதம் பேர் கனடா, லண்டனில் உள்ள அகதிகள் முகாமில் வைக்கப்படுவார்கள். கோயில்கள், மடங்கள் இருக்காது. தாய்மார்கள், சகோதரிகள் சந்தையில் பாலியல் உறவுக்காக விற்கப்படுவார்கள்" என்று பேசியதாகக் கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து பேசிய மற்றவர்கள், ``நாம் ஆயுதம் ஏந்த வேண்டும். இல்லையெனில் நாம் அனைவரும் கொல்லப்படுவோம்" என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

'தர்ம சன்சத்' மாநாடு
'தர்ம சன்சத்' மாநாடு

இந்த ஹரித்வார் மாநாடு பெரும் சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து, இந்துத்துவா வாதிகளின் வெறுப்பு பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதையடுத்து, ஹரித்வார் போலீஸார் அந்த மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது, விரோத போக்கில் வன்முறையைத் தூண்டி விட முயற்சி செய்தல் 153A, குறிப்பிட்ட பிரிவினரைப் புண்படுத்துவது 295A ஆகிய பிரிவுகளின் கீழ், கடந்த டிசம்பர் 21-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் ஜிதேந்திர தியாகி என்பவரை முதல் ஆளாகச் சேர்த்தனர். இவர் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து, யதி நர்சிங்கானந்த் என்ற இந்து மதத்துறவியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக உடனடியாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரமணாவுக்கு 76 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை, ஹரித்வார் அருகிலுள்ள ரூர்கியில், ஜிதேந்திர தியாகி போலீஸாரால் கைது செய்யப்பட்டார் . ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டத்தை அறிந்த நர்சிங்கானந்த் போலீஸாரை, ``நீங்கள் இறந்துவிடுவீர்கள்!" என்று சபித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், யதி நர்சிங்கானந்தை நேற்று உத்தரகாண்ட் போலீஸார் கைது செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism