Published:Updated:

``உப்புக் குவியலில் மகனின் சடலத்தை வைத்த பெற்றோர்'': 4 மணி நேரத்துக்குப் பிறகு நடந்தது இதுதான்!

உப்புக் குவியலில் மகனின் சடலம்!

ஓர் உப்புக்குவியலை ஏற்படுத்தி சிறுவனின் சடலத்தை முழுவதுமாக மூடி, தலை மட்டும் வெளியே தெரியும்படி பெற்றோர் வைத்துள்ளனர். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என நேரம் கடந்ததே தவிர, மகன் உயிர்த்தெழுந்தபாடில்லை.

``உப்புக் குவியலில் மகனின் சடலத்தை வைத்த பெற்றோர்'': 4 மணி நேரத்துக்குப் பிறகு நடந்தது இதுதான்!

ஓர் உப்புக்குவியலை ஏற்படுத்தி சிறுவனின் சடலத்தை முழுவதுமாக மூடி, தலை மட்டும் வெளியே தெரியும்படி பெற்றோர் வைத்துள்ளனர். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என நேரம் கடந்ததே தவிர, மகன் உயிர்த்தெழுந்தபாடில்லை.

Published:Updated:
உப்புக் குவியலில் மகனின் சடலம்!

கர்நாடகா பெல்லாரி பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் சுரேஷ். இவர், தன்னுடைய சிர்வாரா கிராமத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாகத் தண்ணீரில் மூழ்கி சிறுவனின் உயிர் பறிபோயுள்ளது.

death
death

சிறுவனின் சடலத்தை மீட்டுக் கொண்டு வரும்போது, சடலத்தை உப்புக் குவியலில் வைத்தால் சிறுவன் உயிர்பெற்றுத் திரும்பி வருவான் என்று ஒருவர் கூறியுள்ளார். மகனை இழந்த சோகத்தில் இருந்த குடும்பத்தினர், இதைச் செய்து பார்த்தால் தன்னுடைய மகன் திரும்ப உயிர் பெற்றுவிடுவானோ என நம்பியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே ஓர் உப்புக் குவியலை ஏற்படுத்தி சிறுவனின் சடலத்தை முழுவதுமாக மூடி, தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்துள்ளனர். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என நேரம் கடந்ததே தவிர, மகன் உயிர்த்தெழுந்தபாடில்லை. சுமார் நான்கு மணிநேர காத்திருப்புக்குப் பின்பு, சிறுவனின் சடலத்தைத் தகனம் செய்தனர்.

Social Media
Social Media

மகன் பிழைத்துவிடுவான் என்ற ஆதங்கத்தில் குடும்பத்தினர் இதைச் செய்திருந்தாலும், அவநம்பிக்கைகளும், மூடப்பழக்கங்களும் இதில் வெளிப்படுவதை நம்மால் காணமுடிகிறது.

சமூக வலைதளத்தில், இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அச்சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

ஆற்றாமையின் வலியிலும், மூடநம்பிக்கைகள் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.