Published:Updated:

`மீன்பிடி வலை; இறந்தநிலையில் 4 மலைப்பாம்புகள்!' - ஸ்ரீவில்லிபுத்தூர் தாமரைக்குளம் பரபரப்பு

மலைப்பாம்பு மீன்பிடி வலையில் சிக்கி இறந்ததா, நோய்வாய்ப்பட்டு இறந்ததா? எப்படி ஒரே நேரத்தில் நான்கு மலைப்பாம்புகள் மீன்பிடி வலைக்குள் வந்தது என்பது பற்றி விசாரணை நடத்த உள்ளோம்.

மலைப்பாம்பு மரணம்
மலைப்பாம்பு மரணம் ( ஆர்.எம்.முத்துராஜ் )

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் பந்தபாறையில் குளத்தில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி 4 மலைப்பாம்புகள் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பாம்பு
மலைப்பாம்பு

ஶ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் தாமரைக் குளத்தில் மீன்பிடி வலையில் சிக்கி இறந்து கிடந்த மலைப்பாம்புகளை வனத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு வந்தனர். மலைப்பாம்புகள் எப்படி வலைக்குள் மாட்டிக்கொண்டன என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கால்நடை மருத்துவர் மூலம் மர்மமாக இறந்த மலைப்பாம்புகளுக்கு உடற்கூறாய்வு நடத்த ஶ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்

மலைப்பாம்பு பலி
மலைப்பாம்பு பலி

இதுபற்றி மாவட்ட வன அதிகாரி முகமது சபா செய்தியாளர்களிடம் பேசுகையில்,``தாமரைக்குளத்தில் இருந்த மீன்பிடி வலைகளில் சிக்கி இறந்துள்ள இரண்டு மலைப்பாம்புகளின் உடலைக் கைப்பற்றியுள்ளோம். அதற்கு மட்டும் உடற்கூறாய்வு நடத்த முடிவுசெய்துள்ளோம்.

அதன் அடிப்படையில் மலைப்பாம்பு மீன்பிடி வலையில் சிக்கி இறந்ததா, நோய்வாய்ப்பட்டு இறந்ததா? எப்படி ஒரே நேரத்தில் நான்கு மலைப்பாம்புகள் மீன்பிடி வலைக்குள் வந்தன என்பது பற்றி விசாரணை நடத்த உள்ளோம். மலைப்பாம்புகளை வேட்டையாடுவதற்காக வலை விரித்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

மலைப்பாம்பு
மலைப்பாம்பு
ஆர்.எம்.முத்துராஜ்

மலைப்பாம்பு இறப்புக்கு யாராவது காரணமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம், தாமரைக்குளத்தில் மீன்பிடி வலைகளை விரித்து வைத்தவர்கள் பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.