Published:Updated:

தரையில் அமர வைத்து சிறுமிக்கு ரத்தம் ஏற்றிய மருத்துவமனை - வைரலான புகைப்படம்... யார் செய்த தவறு?

viral pic ( twitter )

மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள், அங்கு போதிய படுக்கைகள் இல்லை எனக் கூறி சிறுமியைத் தரையில் அமர வைத்துள்ளனர். அத்துடன் சிறுமிக்கு ரத்தம் ஏறிக்கொண்டிருக்கும் பையை, சிறுமியின் தாயிடத்தில் கொடுத்து உயர்த்திப் பிடிக்குமாறு கூறி உள்ளனர்.

தரையில் அமர வைத்து சிறுமிக்கு ரத்தம் ஏற்றிய மருத்துவமனை - வைரலான புகைப்படம்... யார் செய்த தவறு?

மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள், அங்கு போதிய படுக்கைகள் இல்லை எனக் கூறி சிறுமியைத் தரையில் அமர வைத்துள்ளனர். அத்துடன் சிறுமிக்கு ரத்தம் ஏறிக்கொண்டிருக்கும் பையை, சிறுமியின் தாயிடத்தில் கொடுத்து உயர்த்திப் பிடிக்குமாறு கூறி உள்ளனர்.

Published:Updated:
viral pic ( twitter )

மருத்துவமனையில், சிறுமியைக் கீழே அமர வைத்து, சிறுமிக்கு ரத்தம் ஏறிக்கொண்டிருக்கும் பையை, தாயின் கையில் கொடுத்து நிற்க வைத்த பரிதாபகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையின் இச்செயலுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Blood (Representational Image)
Blood (Representational Image)

மத்தியப் பிரதேசம் போபாலில் சந்தோஷி கேவாட் என்ற 15 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், மைஹார் சிவில் மருத்துவமனைக்கு அவரின் தாய் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனையில் சிறுமிக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால், ரத்தம் ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள், அங்கு போதிய படுக்கைகள் இல்லை எனக் கூறி சிறுமியைத் தரையில் அமர வைத்துள்ளனர். அதோடு அந்தச் சிறுமிக்கு ரத்தம் ஏற்றும் பையை அவரின் தாயிடத்தில் கொடுத்து உயர்த்திப் பிடிக்குமாறு கூறி உள்ளனர். அவரும் ரத்தம் ஏறும்வரை உயர்த்திப் பிடித்தபடி நின்றுள்ளார்.

Blood (Representational Image)
Blood (Representational Image)

இதைப் பார்த்தவர்கள் உடனே இச்சம்பவத்தைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் விட்டனர். வைரலாகிய இந்தப் படத்துக்குப் பலரும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். சிறுமிக்கு நேர்ந்த அவலத்தைக் கண்டு வருத்தமடைந்த பலரும், அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து சம்பத்தை நேரில் சென்று விசாரிக்குமாறு தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் அசோக் அவாதியாவுக்கு, மாவட்ட கலெக்டர் அனுராக் வர்மா உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில், மருத்துவமனை இன்சார்ஜாக இருந்த மருத்துவர் பிரதீப் நிகம் மற்றும் செவிலியர் அஞ்சு சிங்குக்கு உடனடியாக சம்பள உயர்வை ரத்து செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.