‘‘ஆபாசம் மற்றும் அருவருப்பான காரியங்கள் நடக்கும் இடமாக பிடதி ஆசிரமம் இருக்கிறது’’ என்று பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளார், நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா. பாலியல் குற்றச்சாட்டு, அமலாக்கப் பிரிவு வழக்கு என, அடுத்தடுத்த சிக்கலை எதிர்கொண்டுவந்த நித்தியானந்தா விவகாரத்தில், ஜனார்த்தன சர்மா வடிவில் புதிய பூகம்பம் கிளம்பியிருக்கிறது.

‘‘மூன்று ஆண்டுகளாக நித்தியானந்தாவின் செயலாளராக இருந்தபோது, எனக்கே தெரியாமல் பல காரியங்கள் ஆசிரமத்தில் நடத்துள்ளன. அந்த விவரங்களே எனக்கு சில மாதங்களுக்கு முன்புதான் தெரியவந்தன. குறிப்பாக, என் மகளைத் தேடி நான் பிரச்னையைக் கிளப்பியபோது, இந்த ஆசிரமத்தின் மர்மங்கள் ஒன்றொன்றாக வெளிப் பட்டன.

இப்போது நித்தியானந்தா தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இருப்ப தாகச் சொல்கிறார்கள். அவருடன் என் மூத்த மகளும் இருக்கிறார். நான் குஜராத் காவல்துறையில் புகார் அளித்து என் மகள்களை மீட்கும் முயற்சியில் இறங்கிய பிறகு, என் மூன்றாவது மகள் மட்டும் என்னுடன் வந்துவிட்டார். இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருந்த நேரத்தில், என் இரண்டாவது மகளை இந்தியா விலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இவ்வளவு பிரச்னை நடந்துகொண்டிருந்தபோதே, எப்படி விசா எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்ப முடிந்தது எனப் புரியவில்லை.

நித்தியானந்தா ஆசிரமத்தில், பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அதை வெளியே தெரியாமல் மூடி மறைக்கும் வேலையை ரஞ்சிதா உள்ளிட்ட சிலர் செய்து வருகின்றனர். இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். அரசாங்கம் தலையிட்டு, என் இரண்டு மகள்களையும் மீட்டுக் கொடுக்க வேண்டும்’’ என்று கண்ணீருடன் பேசினார் ஜனார்த்தன சர்மா.

நித்தியானந்தாவுக்கு உதவியாளராக இருந்த முன்னாள் பெண் பக்தை ஒருவர், நம்மிடம் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘ஆன்மிகம் என்ற பெயரில் ஆசிரமத்தில் நித்தியானந்தா செய்த அட்டூழியங்கள் அனைத்துமே ஆபாசத்தின் உச்சம். ஆசிரமத்தில் பெண் குழந்தைகளை நித்தியானந்தா சேர்த்துக் கொண்டதே அவர்களைவைத்து பாலியல் தேவையைத் தீர்த்துக்கொள்ளவும், வெளிநாடுகளில் உள்ள பக்தர்களிடம் பணம் வாங்கவுமே. குறிப்பாக 12, 13 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு தீட்சை அளிப்பதாகச் சொல்லி, அவர்களை தனி அறைக்குள் அழைப்பார். அவர்கள் பல மணி நேரம் கழித்தே திரும்பி வருவார்கள். அப்போது அவர்கள் அரை மயக்கத்தில் இருப்பதை நான் பலமுறை பார்த்துள்ளேன்.

அவரை தெய்வமாக பலர் பார்க்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு மிருகம். ஆண், பெண் எனப் பாரபட்சம் இல்லாமல் உறவு வைத்துக் கொள்ள விரும்பும் சைக்கோ. அதனால்தான் ஓரினச்சேர்க்கை சட்டமாக்கப்படுவதை அவர் ஆதரித்தார். ஆசிரமத்தில் உள்ள பெண் குழந்தைகளை உடைகள் இல்லாமல் வெறும் நகைகள் மட்டுமே அணியச்செய்து புகைப்படம் எடுத்து, அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி காசு பார்த்ததும் நடந்துள்ளது.

இந்தியா முழுவதும் இருக்கும் இவருடைய ஆட்கள், கோயில்களில் இருந்த சிலைகளைக் கைப்பற்றி அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். ஆயிரம் கோடி ரூபாய், இந்தச் சிலை விற்பனையால் மட்டுமே ஆசிரம அறக்கட்டளைக்கு வந்துள்ளது! இதுகுறித்த வழக்கு, இப்போது அமலாக்கப் பிரிவிடம் இருக்கிறது.

கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரின் 700 கோடி ரூபாய் பணம், இப்போது பிடதி ஆசிரமத்தில் இருக்கிறது. அங்கு ஏன் இதுவரை மத்திய அரசு ரெய்டு நடத்தவில்லை எனப் புரியவில்லை. நித்தியானந்தாவின் அந்தரங்கம் முழுவதும் தெரிந்தவர்கள் ரஞ்சிதா, மா அச்சலா, பக்த பிரகலானந்தா ஆகிய மூவர்தான். நித்தியானந்தாவின் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், இப்போது இவர்கள் பொறுப்பில்தான் இருக்கின்றன. நித்தியானந்தாவின் காமக்களியாட்டங்கள் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சர்மாவின் இரண்டாவது மகளை அவசரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார்கள்’’ என்றார்.

பிடதி ஆசிரமத்திலிருந்து இன்னும் என்னென்ன வில்லங்க விவகாரங்கள் வெளிவரப் போகின்றனவோ!

- லியானா