Published:Updated:

`அபுதாபியில் வேலை' டெல்லி நட்சத்திர ஹோட்டலில் ரூ.23 லட்சம் ஏமாற்றியவர் கர்நாடகாவில் கைது!

ஹோட்டல் லீலா பேலஸ், டெல்லி.
News
ஹோட்டல் லீலா பேலஸ், டெல்லி.

அபுதாபியில் வசிக்கும் தான், ராயல் குடும்பத்தில் வேலை செய்வதாகவும், தற்போது ஒரு பிசினஸ் விஷயமாக இந்தியாவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். நவம்பர் 20-ம் தேதி ஹோட்டல் அறையில் இருந்த வெள்ளிப் பாத்திரங்கள், முத்து தட்டுக்களைக் களவாடிக் கொண்டு தலைமறைவாகி உள்ளார்.

`அபுதாபியில் வேலை' டெல்லி நட்சத்திர ஹோட்டலில் ரூ.23 லட்சம் ஏமாற்றியவர் கர்நாடகாவில் கைது!

அபுதாபியில் வசிக்கும் தான், ராயல் குடும்பத்தில் வேலை செய்வதாகவும், தற்போது ஒரு பிசினஸ் விஷயமாக இந்தியாவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். நவம்பர் 20-ம் தேதி ஹோட்டல் அறையில் இருந்த வெள்ளிப் பாத்திரங்கள், முத்து தட்டுக்களைக் களவாடிக் கொண்டு தலைமறைவாகி உள்ளார்.

Published:Updated:
ஹோட்டல் லீலா பேலஸ், டெல்லி.
News
ஹோட்டல் லீலா பேலஸ், டெல்லி.

அபுதாபி ராயல் குடும்பத்தோடு தொடர்புடையவர் எனக் கூறி, டெல்லி நட்சத்திர ஹோட்டலில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து, 23 லட்சம் ரூபாய் பணத்தைக் கட்டாமல் தப்பிய மர்ம நபரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹோட்டல் லீலா பேலஸ், டெல்லி.
ஹோட்டல் லீலா பேலஸ், டெல்லி.

மொஹம்மத் ஷரீப் என்பவர் ஆகஸ்ட் 1-ம் தேதி டெல்லி லீலா பேலஸ் ஹோட்டலில் அறை எண் 42-ல் தங்கி இருக்கிறார். அபுதாபியில் வசிக்கும் தான், ராயல் குடும்பத்தில் வேலை செய்வதாகவும், தற்போது ஒரு பிசினஸ் விஷயமாக இந்தியாவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

நவம்பர் 20-ம் தேதி ஹோட்டல் அறையில் இருந்த வெள்ளிப் பாத்திரங்கள், முத்து தட்டுக்களைக் களவாடிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இவர் தங்கியிருந்த நான்கு மாதங்களுக்கான ஹோட்டல் அறை மற்றும் சேவை கட்டணம் என மொத்தம் ரூ.35 லட்சத்தில், ரூ.11.5 லட்சத்தை மட்டுமே செலுத்தியவர், மீதி பணத்தைச் செலுத்தாமல் தப்பி ஓடியுள்ளார்.

ஹோட்டலை விட்டுத் தப்பியோடுகையில் ஊழியர்களுக்கு நவம்பர் 20 எனத் தேதியிடப்பட்ட 20 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். இந்தக் காசோலை பவுன்ஸாகி உள்ளது. இதனால் ஹோட்டலுக்கு 23 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

இந்த சம்பவம் குறித்து ஹோட்டலின் மேனேஜர் அனுபம் தாஸ் குப்தா காவல் நிலையத்தில் ஜனவரி 14-ம் தேதி புகார் அளித்தார். இந்தியத் தண்டனை சட்டம் 419/420/380 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தக்ஷின் கன்னட பகுதியைச் சேர்ந்த 41 வயதான மொஹம்மத் ஷரீப் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டு, டெல்லி அழைத்து வரப்பட்டு, பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 2 நாள்கள் விசாரிக்கக் காவல் துறையினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.