Published:Updated:

கந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா? - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்

கறுப்பர் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பர் கூட்டம்

கறுப்பர் கூட்டம்

கந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா? - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்

கறுப்பர் கூட்டம்

Published:Updated:
கறுப்பர் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பர் கூட்டம்
கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய குற்றச்சாட்டில், ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல்மீது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த சேனலைச் சேர்ந்தவர்கள் சிலர் கந்த சஷ்டி வரிகளைத் திரித்து, ஆபாசமாகக் கருத்துகளைக் கூறியது உலகம் முழுவதும் வாழும் இந்து சமயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா? - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுரேந்தர் நடராஜன் என்பவர் ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலை நடத்திவருகிறார். தொடக்கத்தில், தான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததாகவும், அவர்களின் கொள்கை பிடிக்காமல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டதாகவும் கூறிக்கொள்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலைத் தொடங்கிய சுரேந்தரின் வீடியோக்கள் இந்து மதக் கடவுள்களையும், இந்து புராணங்களையும் விமர்சிக்கும் நோக்கத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ‘ஆபாச புராணம்’ என்கிற தலைப்பில், கந்த சஷ்டி கவசத்தில் வரும் பாடல் வரிகளான ‘சேரிள முலைமார் திருவேல் காக்க...’ என்ற வரிகளைத் திரித்து, ஆபாசமாக சுரேந்தர் பேசியிருப்பது அதிர் வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுரேந்தர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார். அவர் இது குறித்துக் கூறுகையில், “பாரதியார் ‘வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா’ என்றார். பாரதியார் ஆபாசக் கவிஞரா? இறந்த தன் தாயை எரியூட்டும்போது ‘கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி’ என்றார் பட்டினத்தார். அது ஆபாசமா? சமீபகாலமாக இந்துமதக் கடவுளர்களையும், உணர்வுகளையும் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதை எந்த அரசியல் கட்சிகளும் கண்டிக்காதது வேதனை யளிக்கிறது. இந்த விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட கறுப்பர் கூட்டம் நிர்வாகிகளைக் கைது செய்ய வலியுறுத்த வேண்டிய பா.ஜ.க., `வீட்டுக்கு முன் போராட்டம் நடத்துவோம்’ என அறிவிக்கிறது. ஆனால், சாமானிய இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது” என்றார்.

கந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா? - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், “மைசூர் அரண்மனையில் அமைச்சராக இருந்த பால தேவராய சுவாமிகளால் சென்னிமலை முருகன் கோயிலில் பாடப்பெற்ற பாடல்கள்தான் ‘கந்த சஷ்டி கவசம்.’ கோடிக்கணக்கான இந்துக்களின் வீடுகளில் தினமும் ஒலிக்கும் திருப்பாடல் இது. இதைக் கொச்சைப்படுத்துவதை, பெயரிலேயே முருகன் பெயரைத் தாங்கி நிற்கும் ‘பழனிசாமி’ அரசு வேடிக்கை பார்க்கிறது” என்றார் கோபமாக.

திரைப்பட இயக்குநரும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், “பொதுவாகவே, ‘நமக்கு மேல் கடவுள் இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’ என்று சமுதாயத்தில் பயம் ஏற்பட்டால்தான், நெறியோடு வாழும் முறை உருவாகும். இதற்குக் கடவுள் நம்பிக்கை அவசியம். `கறுப்பர் கூட்டம்’ போன்ற சில குழப்பவாதிகள் பகுத்தறிவு என்ற போர்வையில், அந்த பயத்தையே சிதைத்துவருகிறார்கள்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கியுள்ள `கறுப்பர் கூட்டம்’ அமைப்பு, கறுப்பர் கூட்டத்திலுள்ள அனைத்து உறுப்பினர் களும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளது.

அர்ஜூன் சம்பத், லட்சுமி ராமகிருஷ்ணன், புரட்சிக் கவிதாசன்
அர்ஜூன் சம்பத், லட்சுமி ராமகிருஷ்ணன், புரட்சிக் கவிதாசன்

இது குறித்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ.க-வின் தமிழக துணைத் தலைவர்களில் ஒருவருமான புரட்சிக் கவிதாசன் கூறுகையில், “திருப்பரங் குன்றத்தில், திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்து முருகன் தம்பதியரை மறுவீடு அழைத்து வரும்போது, தேவேந்திர குல வேளாளர் வீட்டுக்குத்தான் அழைத்து வருவார்கள். பழனி தைப்பூசத் திருவிழாவை தொடங்கிவைத்து, முதல் மண்டகப்படி செய்வதே தேவேந்திர குல வேளாளர்கள் தான். எல்லாத் தரப்பு மக்களின் தெய்வமான முருகனை இழிவாகப் பேசிவிட்டு, ‘நாங்கள் பட்டியல் சமூகத்தினர்’ என்று கூறுவது கண்டிக்கத்தக்கது” என்றார் சூடாக.

கந்த சஷ்டி கவச விவகாரத்தில் முன்ஜாமீன் கேட்டு சுரேந்தர், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றிய செந்தில்வாசன் என்பவரைக் கைது செய்துள்ளது காவல்துறை.

சுரேந்தரைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரது எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் தரப்பில் விளக்கமளித்தால், வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் aberration.in என்கிற இணைய தளம் மூலம் தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் பங்காற்றியிருக்கிறாராம். இதை பா.ஜ.க-வினர் தோண்டியெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism