Published:Updated:

கொரோனா: `என்னை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!’ - நோயாளியின் அதிர்ச்சி வீடியோ

கொரோனா தொற்று
கொரோனா தொற்று ( மாதிரிப் படம் )

``தண்ணீர் தேவைகளுக்கான ஏற்பாடுகள் எதுவும் மருத்துவமனையில் செய்யவில்லை. நான் மிகவும் தொந்தரவாக உணர்கிறேன்.”

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழப்பதற்கு முன்பாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாகப் போதுமான வசதிகள் மருத்துவம்னைகளில் உள்ளது என மத்திய மற்றும் மாநில அரசுகள் கூறி வரும் நிலையில் அவற்றின் மீது கேள்வி எழுப்பும் விதமாகவும் மருத்துவமனைகளில் நோயாளிகள் நடத்தப்படும் விதத்தை கேள்வி எழுப்பும் விதமாகவும் இந்த வீடியோ அமைந்துள்ளது.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

ஜான்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் உள்ள படுக்கையில் இருந்தபடி 52 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை நோயாளி காட்சிப்படுத்தியுள்ளார். வீடியோவில் அவர் சுவாசிக்க சிரமப்படுவதும் அவரது உடைகளில் ரத்தம் படிந்திருக்கும் காட்சிகளும் தெரிகின்றன. வீடியோவில் அவர் பேசும்போது, ``தண்ணீர் தேவைகளுக்கான ஏற்பாடுகள் எதுவும் மருத்துவமனையில் செய்யவில்லை. நான் மிகவும் தொந்தரவாக உணர்கிறேன். என்னை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இங்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை. எல்லாமே அலட்சியமாக நடக்கிறது” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார். அவரைச் சுற்றி இன்னும் பல நோயாளிகள் படுக்கையில் கிடக்கின்றனர்.

கொரோனா
கொரோனா

மருத்துவமனையின் தலைமை அதிகாரி இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோவில் பேசிய நோயாளியின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் அதே மருத்துவமனையில் வேறொரு பிரிவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் அலட்சிய செயல்பாடுகள் தொடர்பாக தொடர்ந்து வெளிவரும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கின்றன.

ஹைதராபாத்: `2 லிட்டர் ஆக்ஸிஜன் இருந்தால் உயிருடன் இருந்திருப்பார்!’ - கொரோனா வார்டு அதிர்ச்சி
அடுத்த கட்டுரைக்கு