ஆகமவிதிகளைக் காக்க வேண்டிய ஆலயத்தின் தலைமை குருக்களே அதை மீறும்வகையில், ராமேஸ்வரம் கோயில் கருவறையில் உள்ள மூலவரைப் படமெடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த செயல் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

காசிக்கு இணையான புனிதத்தலமாக வணங்கப்படும் இடம் ராமேஸ்வரம். ராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்க ராமனால் வழிபடப்பட்ட சிவலிங்கம், இங்கு உள்ள கோயில் கருவறையில் மூலவராக உள்ளது என்பது ஸ்தல வரலாறு. ராமனால் வழிபடப் பட்டதால், மூலவருக்கு `ராமநாதசுவாமி’ என்ற நாமம் உண்டு.

தமிழகத்தில் கோயில் அமைந்திருந் தாலும் கருவறையில் உள்ள மூலவருக்கு பூஜை செய்யும் உரிமை, மராட்டியத்தைப் பூர்வீகமாகக்கொண்ட அர்ச்சகர்களுக்கு மட்டுமே உள்ளது. அவர்களைத் தவிர வேறு எவரும் கோயில் கருவறைக்குள் செல்ல இயலாத நிலையில், அங்கு உள்ள மூலவரின் படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இந்த விதிமீறலில் ஈடுபட்ட அர்ச்சகர்மீது கடும் நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பிரபாகரன், ‘‘சைவம், வைணவம் என இரு தரப்பினரும் வணங்கக்கூடிய புனிதம் நிறைந்தது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம். கடவுளாக வழிபடப்படும் ஸ்ரீராமனாலேயே வணங்கப் பட்டது இங்கு உள்ள சிவலிங்கம். இத்தகைய பெருமை கொண்டதால்தான் நாடு முழுவ திலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

மூலவராக விளங்கும் ராமநாதசுவாமியான சிவலிங்கம் வீற்றிருக்கும் கருவறைக்குள் செல்லவும் பூஜை செய்யவும் பல்வேறு ஆகமவிதிகள் உள்ளன. மராட்டியத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, சிருங்கேரி சங்கராச் சாரியாரிடம் தீட்ஷை பெற்ற குருக்கள் மட்டுமே இங்கு பூஜை செய்ய முடியும். இவர்களைத் தவிர்த்து சிருங்கேரி சங்கராச்சாரியார், காஞ்சி சங்கராச்சாரியார், நேபாள மன்னர் ஆகிய மூவருக்கு மட்டுமே கருவறைக்குள் செல்ல சிறப்பு அனுமதி உண்டு. கருவறையில் உள்ள சிவலிங்கத்தைப் படமெடுக்கக் கூடாது. தேவஸ்தான வெளியீடுகளில்கூட ஓவியர்களால் வரையப்பட்ட மூலவரின் படமே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்கு, மூலவரை தன் செல்போன்மூலம் படமெடுத்து அனுப்பியுள்ளார் குருக்கள் ஒருவர். இதற்காக பெரும்தொகையையும் அந்தப் பக்தரிடமிருந்து பெற்றுள்ளார். மூலவருக்கு பூஜைகள் செய்யச் செல்லும் அர்ச்சகர்களுக்கு எனப் பல்வேறு ஆகமவிதிகள் உள்ளன. கொலை வழக்கில் ஜெயேந்திரர்மீது குற்றம்சாட்டப்பட்ட பிறகு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த அவருக்கு கருவறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகளையும் பக்தர்களின் நம்பிக்கையையும் அவமதிக்கும்வகையில், இப்போதைய சம்பவம் நடந்துள்ளது.

இன்று பணத்துக்காக மூலவரைப் படம்பிடித்து அனுப்பியவர், நாளை பணத்துக்காக சிலைக்கடத்தலில் ஈடுபட மாட்டார் என எப்படி நம்புவது? இதற்கு முற்றுப் புள்ளி வைக்க, தவறிழைத்த அந்தக் குருக்கள்மீதும், இதற்குக் காரணமான அந்த பக்தர்மீதும் கடும் நடவடிக்கையெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், பக்தர்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

பக்தர்களைக் கொந்தளிக்கவைத்துள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த இணை ஆணையர் கல்யாணி, ‘‘கோயில் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரின் படம் பகிரப்பட்டது குறித்து விசாரணை நடத்தினோம். அதில், தலைமை குருக்கள் விஜய் போகில் என்பவர்தான் அதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தன் இடுப்பில் வைத்திருந்த செல்போன், மூலவரை தானாகவே படமெடுத்திருக்கிறது. செல்போனைப் பழுதுபார்த்தபோது அதில் இருந்த மூலவர் படம் தவறுதலாக வெளிநபருக்குச் சென்றுவிட்டது என வினோதமான பதிலைக் கூறினார். அவரின் பதில் ஏற்கத்தக்கதல்ல. இதுகுறித்து தக்கார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

‘நல்லவேளை... தன் செல்போனை வாங்கி ராமநாதசுவாமியே செல்ஃபி எடுத்துக்கொண்டார் என்று குருக்கள் சொல்லாமல் விட்டாரே!’ என்று கோயில் வட்டாரத்தில் கிண்டலடிக்கின்றனர்.