Published:Updated:

மத சர்ச்சை மல்லுக்கட்டில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை!

கன்னியாகுமரி அரசு மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
கன்னியாகுமரி அரசு மருத்துவமனை

கல்லூரியின் டீன், கொரோனா பணிகளில் கவனம் செலுத்துவதைவிட கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்.

மத சர்ச்சை மல்லுக்கட்டில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை!

கல்லூரியின் டீன், கொரோனா பணிகளில் கவனம் செலுத்துவதைவிட கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்.

Published:Updated:
கன்னியாகுமரி அரசு மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
கன்னியாகுமரி அரசு மருத்துவமனை
கொரோனா விவகாரத்தில் எங்கெங்கோ என்னென்னவோ பிரச்னைகள்... ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதும் மதம்தான் மாறாத தொற்றாகத் தொடர்கிறது.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனிவார்டுகளில், கொரோனா பாதித்த 16 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில் தான், கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இந்தக் கல்லூரியில் கிறிஸ்துவ ஜெபக்கூடம் கட்டுவதாக புகார் கிளப்பியிருக்கிறது இந்து முன்னணி அமைப்பு. பதிலுக்கு, பொய்ப்புகார் கூறி தேவையில்லாத டார்ச்சர் செய்வதாக குற்றம்சாட்டுகிறார் மருத்துவமனை டீன்.

மருத்துவமனையில் உள்ள ஜெபக் கூடம்
மருத்துவமனையில் உள்ள ஜெபக் கூடம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் தலைவர் மிசா சோமனிடம் பேசினோம். “கல்லூரியின் டீன், கொரோனா பணிகளில் கவனம் செலுத்துவதைவிட கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதிலேயே குறியாக இருக்கிறார். கொரோனா வார்டு அமைக்கச் சொன்னால் ஜெபக்கூடம் அமைக்கிறார். அவர் வந்த புதிதில், இங்கு கிறிஸ்துவ வழிபாட்டுத்தலம் அமைக்க முயன்றார். எங்கள் எதிர்ப்பால் அது நடக்கவில்லை. இப்போது ரெக்கார்ட் அறையை கிறிஸ்துவ ஜெபக்கூடமாக மாற்றி பைபிள் வைத்துள்ளனர். ஆங்காங்கே கிறிஸ்துவ வசனங்கள் எழுதப் பட்டுள்ளன. உயிர் காக்கும் மருத்துவமனையின் உயர் அதிகாரியே இப்படிச் செய்வது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளோம்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டீன் சுகந்தி ராஜகுமாரியிடம் பேசினோம். “கல்லுாரி வளாகத்தில் ‘தயா கேந்திரம்’ என்ற பெயரில் நோயாளிகளை உடன் இருந்து கவனித்துக்கொள்பவர்களை தங்கவைத்து ஓர் அமைப்பினர் பணம் வாங்குகிறார்கள். அதனால் சப் மீட்டர் வாங்கிக்கொண்டு அந்தக் கட்டடத்துக்கான மின்கட்டணத்தை அவர்களையே செலுத்தச் சொன்னேன். கேட்கவில்லை. அங்கே கொரோனா வார்டு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை. மாறாக, அங்கே ஷெட் போட்டு சமைக்கத் தொடங்கிவிட்டார்கள். `அனுமதியின்றி ஏன் இங்கே சமைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். இதுதான் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். எனது நியாயமான நடவடிக்கை பிடிக்காததால் வேண்டுமென்றே புகார் சொல்கிறார்கள்’’ என்றவரிடம் ஜெபக்கூடம் புகார் பற்றிக் கேட்டோம்.

சேவா பாரதி அமைப்பின் சார்பாக செயல்படும் தயா கேந்திரம்
சேவா பாரதி அமைப்பின் சார்பாக செயல்படும் தயா கேந்திரம்

‘‘ஏற்கெனவே இங்கு இந்து கோயில் ஒன்று இருக்கிறது. இங்கு உள்ள டாக்டர்கள், நர்ஸ்களில் 75 சதவிகிதம் பேர் கிறிஸ்துவர்கள். கொரோனா பணியில் உள்ள அவர்களால் வீட்டுக்குப் போக முடியாது. அவர்கள் ஜெபம் செய்ய பிரேயர் ஹால் வேண்டும் எனக் கேட்டனர். அதற்கே நான் அனுமதி தரவில்லை. பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம் அருகில் உள்ள கட்டடத்தை வெள்ளையடித்து அங்கு சிலர் ஜெபம் செய்தார்கள். இதுவும் பிரச்னையாகும் என அந்தக் கட்டடத்தையும் பூட்டிவிட்டேன். இதைத்தான் கொரோனாவுக்காக வந்த பணத்தில் நான் ஜெபக்கூடம் கட்டுவதாகக் கூறுகிறார்கள். கொரோனாவுக்காக எனக்கு நேரடியாக எந்த நிதியும் வரவில்லை.

மத சர்ச்சை மல்லுக்கட்டில்
கன்னியாகுமரி அரசு மருத்துவமனை!

இந்தப் புகாரால் இங்கு பணியாற்றும் கிறிஸ்துவர்கள் மனம் நொந்துள்ளார்கள். அவர்கள் போராட்டம் நடத்தட்டுமா எனக் கேட்டார்கள். இந்தச் சமயத்தில் நாம் கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட வேண்டும் என அமைதிப்படுத்திவிட்டேன். கல்லூரியில் எத்தனையோ வளர்ச்சிப் பணிகள் செய்தும் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்கள். வி.ஆர்.எஸ் கொடுத்துவிடலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால், இந்தச் சமயத்தில் வேண்டாம் என முடிவுசெய்துள்ளேன்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தயா கேந்திரத்தைப் பராமரித்துவரும் சேவா பாரதி அமைப்பின் குமரி மாவட்டத் தலைவர் அசோக்குமாரிடம் பேசினோம். “எங்களுக்கும் புகார் கொடுத்த அமைப்புக்கும் சம்பந்தமில்லை. எங்கள் அமைப்பு, சேவை அமைப்பு மட்டுமே. தயா கேந்திரம் என்பது, மத்திய அரசின் திட்டம். இங்கு தங்கும் நபரிடம் 20 ரூபாய் மட்டும் வசூலித்து அதை படுக்கை மற்றும் பாத்ரூமை சுத்தப்படுத்துபவர்களுக்கு சம்பளமாகக் கொடுக்கிறோம். கொரோனா சேவையின் ஒரு பகுதியாக இங்கு சமையல் செய்து அனைவருக்கும் உணவு வழங்குகிறோம்” என்றார்.

மிசா சோமன் - சுகந்தி ராஜகுமாரி - அசோக்குமார் -  சரவணகுமார்
மிசா சோமன் - சுகந்தி ராஜகுமாரி - அசோக்குமார் - சரவணகுமார்

இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் சரவணகுமாரிடம் கேட்டோம். “தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் நோயாளிகளைக் கவனிக்க ஒரு கட்டடம் கட்டப்பட்டு, தயா கேந்திரம் என்ற தொண்டு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டுக்காக மாவட்ட நிர்வாகம் கேட்டபோது அந்தக் கட்டடத்தை ஒப்படைத்துவிட்டோம். இப்போது எதற்காக இந்தப் பிரச்னையைக் கிளப்புகிறார்கள் எனத் தெரியவில்லை” என்றார்.

உயிர் காக்கும் மருத்துவமனையிலேனும் மதத்தைத் தவிர்த்து மனிதத்தைக் காப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism