Published:Updated:

ஆய்வாளர்களுக்கு விருந்து கொடுத்த ஸ்டெர்லைட் ஆலை!

ஸ்டெர்லைட் ஆலை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டெர்லைட் ஆலை

கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

ஆய்வாளர்களுக்கு விருந்து கொடுத்த ஸ்டெர்லைட் ஆலை!

கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

Published:Updated:
ஸ்டெர்லைட் ஆலை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டெர்லைட் ஆலை

பணி மாறுதலாகிச் சென்ற காவல் ஆய்வாளருக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர் குடியிருப்பில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில், காவல் துறை ஆய்வாளர்கள் சிலர் கலந்துகொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வாளர்களுக்கு விருந்து கொடுத்த ஸ்டெர்லைட் ஆலை!

தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய எல்லைப் பகுதியில் உள்ளது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் காவல்நிலையத்தின் ஆய்வாளராகப் பணிபுரிந்த தில்லை நாகராஜன், சில நாள்களுக்கு முன் பாளையங்கோட்டை காவல்நிலையத்துக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு, ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர் குடியிருப்பான தாமிரா 1-ல் வைத்து ஆலை நிர்வாகம் சார்பில், இரவில் பிரியாவிடை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தூத்துக்குடியில் உள்ள வடபாகம், தென்பாகம், மத்திய பாகம் மற்றும் தெர்மல் நகர் காவல்நிலையங்களின் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இந்தத் தகவல், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் மாவட்ட எஸ்.பி-யிடம் மனு கொடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ‘‘மக்கள் போராட்டத்துக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ள நிலையில், ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு ஆலை நிர்வாகம் நடத்திய பிரியாவிடை நிகழ்ச்சியில் பிற ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.

ஆய்வாளர்களுக்கு விருந்து கொடுத்த ஸ்டெர்லைட் ஆலை!

இதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். ஓர் ஆய்வாளருக்கு ஆலைத்தரப்பு ஏன் பிரியாவிடை நிகழ்ச்சியை நடத்த வேண்டும்? 13 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கோர நிகழ்வில் காவல்துறையினர்மீது மக்களின் ஆதங்கம் இன்னும் தீராத நிலையில், இப்படியொரு விருந்து நிகழ்ச்சியில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டது பெரும்வலியை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்களான இதுபோன்ற அதிகாரிகள் ஆலையுடன் கைகோத்துக்கொண்டு ஆதரவாகச் செயல்படுவது, அரசின் கொள்கை முடிவுக்கு எதிராகச் செயல்படும் சதிச்செயல். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களை, பணிநீக்கம் செய்ய வேண்டும். இதில், மெத்தனப்போக்கு ஏற்பட்டால் காவல்துறையைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘பார்ட்டி விஷயம் தெரிந்ததும் கடுப்பான எஸ்.பி., சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களை நேரில் வரச்சொல்லி கடுமையாக எச்சரித்து மெமோ கொடுத்து அனுப்பினார். நடவடிக்கை எடுப்பதில் எஸ்.பி உறுதியாக இருக்கிறார்’’ என்றனர் எஸ்.பி அலுவலகக் காவலர்கள்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான அருண் பாலகோபாலனிடம் பேசினோம், “இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களின் பதில் கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மட்டும் சொன்னார்.

ஸ்டெர்லைட் நிர்வாகத் தரப்பில் இந்த விவகாரம் குறித்து பேசியபோது, ‘‘கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’’ என்றே பதில் கிடைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism