Published:Updated:

"எனக்காடா எண்ட் கார்டு போடப்பாக்குறீங்க... எனக்கு எண்டே கிடையாது!" - எகத்தாளமாய் சொல்லும் நித்தி

நித்தியானந்தா

"நித்தியின் சொத்துக்கள் பல இடங்களில் முடக்கப்பட்டதால், வருமானத்திற்குத் திண்டாட்டம் ஏற்பட்டது. அவருக்குப் பெரும்பலமாக இருந்த வெளிநாட்டு வாழ் பக்தர்களும் அவருடைய சுயரூபம் தெரிந்து இப்போது பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள்."

"எனக்காடா எண்ட் கார்டு போடப்பாக்குறீங்க... எனக்கு எண்டே கிடையாது!" - எகத்தாளமாய் சொல்லும் நித்தி

"நித்தியின் சொத்துக்கள் பல இடங்களில் முடக்கப்பட்டதால், வருமானத்திற்குத் திண்டாட்டம் ஏற்பட்டது. அவருக்குப் பெரும்பலமாக இருந்த வெளிநாட்டு வாழ் பக்தர்களும் அவருடைய சுயரூபம் தெரிந்து இப்போது பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள்."

Published:Updated:
நித்தியானந்தா

"அடுத்த 200 ஆண்டுகளுக்கு நான் வாழப்போகிறேன்டா. அந்த அளவுக்கு உடம்பைத் தயார் பண்ணியிருக்கேன். நீ உட்கார்ந்து ட்ரோல் பண்ணிக்கிட்டே இரு" என்று சில நாள்களுக்கு முன்பு வீரமாக வீடியோவில் பேசியிருந்தார் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா.

அதே நித்தியானந்தாதான் கடந்த 11-ம் தேதி, “எனக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மை. எனக்கு 27 டாக்டர்கள் மருத்துவம் செய்தும், என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியவில்லை. எனக்கு ஞாபகமறதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவற்றிலிருந்து எல்லாம் விரைவில் மீண்டும் வருவேன்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட நித்தியானந்தா, “திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்று தன் கைப்பட காகிதத்தில் எழுதும் வீடியோவையும் அதோடு சேர்த்து வெளியிட்டு தனது இருப்பை மீண்டும் உறுதி செய்தார்.

நித்தியானந்தா விளக்கம்
நித்தியானந்தா விளக்கம்
நித்தியானந்தா மறைந்துவிட்டார் என்று கடந்த வாரம் செய்திகள் வெளியானதிலிருந்து, "நான் திரும்பிவந்துட்டேன்னு சொல்லு“ என்று நித்தியானந்தா அறிவிப்பு வெளியிடும் வரை பல பரபரப்புகள் 'கைலாசா' என்றழைக்கப்படும் நித்தியானந்தாவின் மறைவிட பகுதியைச் சுற்றி நடந்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து நித்தியானந்தாவிற்கு நெருக்கமானவர்கள் நம்மிடம், "சாமி எப்படிச் சமாதியாவார் என்பது அவருக்குத் தெரியும். இப்போது அவர் மறைந்துவிட்டார் என்று செய்திகளைக் கசியவிட்டது அவருக்கு விரும்பாத சிலர்தான். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபிறகு நித்தியானந்தாவே ஒரு விளக்கம் கொடுத்தார். அதில், 'நான் சமாதியில் இருக்கிறேன். எனது வெறுப்பாளர்கள் நான் இறந்துவிட்டதாகப் பரப்பிவரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் உயிரிழக்கவில்லை. இப்போது பேசுவதற்கும் சத்சங்கம் செய்வதற்கும் இயலாது. இன்னும் கொஞ்சம் கூடுதல் காலம் எடுக்கும்' என்று நிதர்சனத்தைச் சொல்லியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், 'மனிதனாக இருப்பதைவிடக் கைலாசத்தில் அதிகநேரம் செலவிட விரும்புகிறேன். தேவைப்பட்டால் நிஜ உலகத்துக்கு மீண்டும் வருவேன். நான் மீண்டும் மனிதனாக வருகை புரிந்து உங்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்' என்று அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதாவது கடவுளின் அவதாரம் என்பதையே அவர் மீண்டும் சமாதி நிலைக்குச் சென்று நிரூபணம் செய்துள்ளார். இதேபோல் சமாதி நிலையை அவர் ஏற்கெனவே சில முறை செய்துள்ளார். குறிப்பாகச் சமாதியிலிருந்து எழுந்த பின் அவர் ஆன்மிகப் பயிற்சி வகுப்புகளில் பரமசிவன் கொடுத்த சக்திகளை தீக்சையாக வழங்குவார்" என்று சிலாகித்துப் பேசுகிறார்கள்.

உண்மையில் நித்தியானந்தாவின் இந்த சமாதி விவகாரம் குறித்து நித்தியானந்தாவை நன்கு அறிந்தவர்களிடம் கேட்டபோது, “சமாதி என்றாலே அவர் மரணித்துவிட்டதாகத்தான் அர்த்தம். தற்போது நித்தியானந்தாவுக்கு உடல் உபாதைகள் இருப்பது உண்மைதான். அவர் வனாடூ தீவில் மிகவும் குறைவான நபர்களுடனே இருந்துவருகிறார்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

இந்தியாவை விட்டு அவர் வெளியேறிய பிறகு அவருக்கு எதிராகத் தொடர்ந்து எங்களைப் போன்ற பலரும் சட்டப்போராட்டம் நடத்தியதால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரது சொத்துக்கள் பல இடங்களில் முடக்கப்பட்டதால், வருமானத்திற்குத் திண்டாட்டம் ஏற்பட்டது. அவருக்குப் பெரும்பலமாக இருந்த வெளிநாட்டு வாழ் பக்தர்களும் அவருடைய சுயரூபம் தெரிந்து இப்போது பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இதனாலே அவர் மீண்டும் ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்போவதாக அறிவித்தார்.

21 நாள்கள் ஆன்மிகப் பயிற்சி வகுப்புகளை முன்பு பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவே நேரடியாக நடத்துவார். இப்போது ஆன்லைன் மூலமே ஆன்மிகப் பயிற்சி வழங்கி, ஆன்லைன் வழியாகத் தீட்சை வழங்கப்படும் என்று புதிய கதையை மக்களிடம் பரப்பிவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆன்மிகப் பயிற்சி வகுப்பில் சேருவதற்குத் தனியாகக் கட்டணம் வசூல் செய்யப்படும். அப்படிப் பயிற்சிக்கு வரும் வசதியானவர்களை மூளைச் சலவை செய்து தனது கஜானாவை நிரப்பிக்கொள்வார் நித்தி. இந்த முறை ஆன்லைன் வகுப்பில் சேரும் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. கையிலிருந்த காசும் கரைந்து அதற்கும் நெருக்கடி வந்துவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாகவே நித்தியானந்தா கடும் மன உளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலையும் தற்போது நலிவுற்றுவிட்டது. பணநெருக்கடி, மன நெருக்கடி எல்லாம் அவர் உடல்நிலையைப் பாதித்துவிட்டன. அவருக்கு உடல்ரீதியாக என்ன பிரச்னை என்பது குறித்துதான் நாங்கள் இப்போது விசாரித்துவருகிறோம். நித்தியானந்தா மரணம் என்று செய்திகள் வந்த நிலையில், அவரது பக்தர்கள் அவர் சமாதியில் இருப்பதாகக் கூறியதுதான் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் தோலும் துரும்புமாக அவர் படுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு அந்தச் சந்தேகத்திற்குத் தீர்வு சொல்லிவிட்டார்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

அதே நேரம் இந்த போட்டோவை வைத்து மீண்டும் ஓர் அனுதாப அலையை நித்தி தனது பக்தர்களிடம் உருவாக்கிவிடுவார். அது அவருக்குக் கைவந்த கலை. அதன்மூலம் மீண்டும் கோடிக்கணக்கான ரூபாய் கலெக்ஷன் செய்துவிடுவார்" என்று ஆதங்கப்படுகிறார்கள்.

நித்தம், நித்தம் நித்தியானந்தா தனது பக்தர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறார். இதுவும் ஒரு ஆன்மிக டெக்னிக் என்று அவரது சிஷ்யர்கள் சொல்வதுதான் வேடிக்கை. இன்னும் என்னென்ன காட்சிகள் எல்லாம் கைலாசாவை சுற்றி நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism