Published:Updated:

பாலியல் வன்முறைக்கு ஆளான 10 வயது சிறுமி!- மதுரையில் முதியவரை போலீஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

மதுரையில் ஒரு பகுதியில் 5-ம் வகுப்பு படித்துவரும் சிறுமியைத் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்த 60 வயதான முதியவர், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சிறுமிக்கு கொடுமை
சிறுமிக்கு கொடுமை ( ஈ.ஜெ.நந்தகுமார் )

நம் நாட்டில் சிறார்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது மனிதர்களாக உள்ள அனைவரையும் கவலையடையச் செய்கிறது.

சிறுமியை வதை செய்தவன்
சிறுமியை வதை செய்தவன்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரையில் 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த 60 வயதான முதியவர், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பெற்றோர்கள் ஆதரவு இல்லாமல் தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 10 வயது சிறுமி, பள்ளிக்கு செல்லும்போதும் தெருவில் விளையாடச் செல்லும்போதும், அப்பகுதியில் வசித்துவந்த முதியவர் ஒருவர் அன்பாகப் பேசி அச்சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்துவந்துள்ளார்.

சிறுமிக்கு கொடுமை
சிறுமிக்கு கொடுமை
ஈ.ஜெ.நந்தகுமார்

அந்த முதியவரின் வக்கிர எண்ணம் தெரியாமல் சிறுமியும் தாத்தா என்று மரியாதை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், படிப்புக்காக அச்சிறுமியை அரசு விடுதியில் சேர்க்கச் சென்றபோது மருத்துவ சோதனை செய்திருக்கின்றனர். அப்போது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.

இதைப்பற்றி அச்சிறுமியிடம் உறவினர்கள் விசாரித்தபோது, தனக்கு தின்பண்டங்கள் வாங்கித் தந்த முதியவர்தான் இதற்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். அதோடு கோபமான உறவினர்களும், தெருக்காரர்களும் அந்த முதியவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். முதியவர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள்.

சிறுமியை வதை செய்தவன்
சிறுமியை வதை செய்தவன்
ஈ.ஜெ.நந்தகுமார்

குழந்தைகள் பள்ளிக்கும் வெளியே விளையாடச் சென்று வரும்போதும் அவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர்களோ, பாதுகாவலர்களோ கவனிக்க வேண்டும். அவர்களுடன் இயல்பாக பேச வேண்டும் என்றும், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்கிறார்கள் குழந்தை உரிமை ஆர்வலர்கள்.