Published:Updated:

அரசு மருத்துவமனை செவிலியர் மர்மக் கொலை - காவல்துறை விசாரணை!

அரசு மருத்துவமனை செவிலியர் மர்மக் கொலை - காவல்துறை விசாரணை!
அரசு மருத்துவமனை செவிலியர் மர்மக் கொலை - காவல்துறை விசாரணை!

அரசு மருத்துவமனை செவிலியர் மர்மக் கொலை - காவல்துறை விசாரணை!

அவிநாசி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராகப் பணியாற்றி வந்த சாந்தி என்பவர் இன்று வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

அரசு மருத்துவமனை செவிலியர் மர்மக் கொலை - காவல்துறை விசாரணை!

திருப்பூரை அடுத்துள்ள பத்மாவதிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் 57 வயதான சாந்தி. அவிநாசி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியரான இவர், தன்னுடைய கணவர் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக வீட்டில் தனியாகவே வசித்து வந்திருக்கிறார். இவரின் மகள் செளமியாவும் திருமணம் முடிந்து கணவருடன் கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், செளமியா இன்று காலை வழக்கம்போல தனது தாய் சாந்திக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேச முயற்சி செய்கையில், சாந்தியின் செல்போனில் அழைப்பு ஏற்கப்படாமல் தொடர்ந்து ரிங் மட்டுமே சென்றுகொண்டு இருந்திருக்கிறது. எனவே, தாய் சாந்தியின் வீட்டருகே வசிப்பவரின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சாந்தியின் வீட்டுக் கதவை திறந்து உள்ளே சென்றுபார்க்கையில், அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு உயிரற்றுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். பின்னர் அப்பகுதி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சாந்தியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாந்தி கொலை செய்யப்பட்ட வீட்டில் இருந்த 8 பவுன் நகையும் காணாமல் போயிருப்பதாகக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதால், கொள்ளைமுயற்சிக்காக நடத்தப்பட்ட கொலையா அல்லது முன்விரோத கொலையைத் திசைதிருப்ப கொள்ளை சம்பவம் போல அரங்கேற்றப்பட்டு இருக்கிறதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. தடயவியல் நிபுணர்கள் சோதனை மற்றும் மோப்பநாய் சோதனை உள்ளிட்டவையும் நடத்தப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு