Published:Updated:

திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை

சி.ய.ஆனந்தகுமார்
திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை
திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை

திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை

திருச்சி கீழ சிந்தாமணி அருகே, ஓடத்துறையை சேர்ந்த ரவுடி சசி என்கிற சசிகுமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சசிகுமார் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொலைக்கு காரணமான மர்ம நபர்கள் குறித்தும்,  கொலையாளிகள் குறித்தும் திருச்சி கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்த கொலை சம்பவத்தால், திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.