Published:Updated:

11 வயது சிறுமியிடம் அத்துமீறல்; 45 வயது நபர் போக்சோவில் கைது! - வேலூரில் அதிர்ச்சி

வேலூர்
வேலூர்

வேலூரில், பெற்றோர் கண்முன்னாலேயே 11 வயது சிறுமியிடம் அத்துமீற முயன்ற 45 வயது நபர் கைதுசெய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாநகரத்தில் வசிக்கும் 11 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார். அந்தச் சிறுமி, தனது வீட்டு வாசலில் அமர்ந்து பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மக்கான் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 45 வயதுடைய இளங்கோவன் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரின் தந்தையையும் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார் இளங்கோவன். இந்தச் சம்பவம் குறித்து, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், இளங்கோவனைக் கைதுசெய்து சிறையிலடைத்துள்ளனர்.

சிறார் வதை
சிறார் வதை

``பாலியல் வன்முறை செய்திகள் இல்லாத நாளே கிடையாது. குழந்தைகளிடம் அத்துமீறும் கொடூரர்கள், ‘வெளியில் சொன்னால் அப்பா, அம்மாவைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டிவிடுகிறார்கள். குழந்தைகள் அச்சமடைவதால், பாலியல் துன்புறுத்தல்களும் தொடர்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்திலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென குழந்தைகளுக்குப் பெற்றோர்தான் சொல்லித் தர வேண்டும். பெற்றோரைத் தவிர மற்றவர்களை அவசியம் இல்லாமல் அருகில் நெருங்கவிடக் கூடாது’’ என்கிறது காவல்துறை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு