Published:Updated:

ஹாசினி கொலை வழக்கு விசாரணை முடிந்தது! தீர்ப்பிற்காக காத்திருக்கும் தஷ்வந்த்!

JAYAVEL B
ஹாசினி கொலை வழக்கு விசாரணை முடிந்தது! தீர்ப்பிற்காக காத்திருக்கும் தஷ்வந்த்!
ஹாசினி கொலை வழக்கு விசாரணை முடிந்தது! தீர்ப்பிற்காக காத்திருக்கும் தஷ்வந்த்!

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிறுமி ஹாசினி கொலைவழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சாட்சிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டுவிட்ட நிலையில் தீர்ப்பிற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் ஆறு வயது மகள் ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததாக அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விடுமுறை தினங்களிலும் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணைக்காக தஷ்வந்த் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தஷ்வந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகுமார், “இந்த வழக்கில் இதுவரை 42 ஆவணங்கள் விசாரணை செய்யப்பட்டன. 30 சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. இன்று இறுதிக்கட்ட விவாதம் நடைபெற்றது. எழுத்துப்பூர்வமாக எங்களது பதிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அரசு வழக்கறிஞரும் அவரின் வாதத்தை முடித்துவிட்டார்கள். அரசுத்தரப்பு வழக்கறிஞரும் எழுத்துப்பூர்வ வாதஅறிக்கையை புதன்கிழமை கொடுத்துவிடுவதாக சொல்லியிருக்கிறார். இதனால் புதன் கிழமையே தீர்ப்பிற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.” என்கிறார்.