Published:Updated:

விழுப்புரம் ஆராயி வழக்கில் தில்லைநாதன் சிக்கியது எப்படி?

விழுப்புரம் ஆராயி வழக்கில் தில்லைநாதன் சிக்கியது எப்படி?

விழுப்புரம் ஆராயி வழக்கில் தில்லைநாதன் சிக்கியது எப்படி?

விழுப்புரம் ஆராயி வழக்கில் தில்லைநாதன் சிக்கியது எப்படி?

விழுப்புரம் ஆராயி வழக்கில் தில்லைநாதன் சிக்கியது எப்படி?

Published:Updated:
விழுப்புரம் ஆராயி வழக்கில் தில்லைநாதன் சிக்கியது எப்படி?

தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம், வெள்ளம்புத்தூர் ஆராயி வழக்கின் குற்றவாளி தில்லை நாதன் சிக்கியது எப்படி என விழுப்புரம் மாவட்டக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி இரவு, தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் ஆராயி. அப்போது, வீட்டிற்குள் புகுந்து மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு, 10 வயது சிறுவன் சமயனையும் காலால் மிதித்துக் கொன்றனர் மர்ம நபர்கள். இந்தத் தாக்குதலில், தலையில் பலமாகக் காயமடைந்த ஆராயியும், தனமும் 22-ம் தேதி சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாததால், குற்றவாளிகளைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் என்று அறிவித்தது காவல்துறை. இதற்கிடையில், குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக, வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் ஆராயியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்த நிலையில், ஒரே வாரத்தில் நிலைமை மோசமானது. ஆனால், சிறுமி தனம் ஓரளவு உடல்நலம் தேறி பேசும் அளவுக்கு வந்ததும், அவளிடம் குற்றவாளிகளைப் பற்றி தகவலைப் பெற முயற்சிசெய்தது காவல்துறை. ஆனால், சிறுமி தனம் எதுவுமே தெரியவில்லை என்று அலறி அழ ஆரம்பித்ததால், வேறு கோணத்தில் தனது விசாரணையைத் தொடங்கியது போலீஸ்.

போலீஸாரின் தொடர் விசாரணையால், கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த தில்லைநாதன் (36) என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில், உள்ளூர் மற்றும் வெளியூர் குற்றவாளிகள் உட்பட 300 பேருக்கும் மேல் விசாரணை செய்யப்பட்டது. அதேபோல ஆராயி சம்பவத்துக்கு முன்பு, வேலூர், கடலூர் மற்றும் திருச்சி சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையான கைதிகளின் விவரங்களையும் சேகரித்தது காவல்துறை. இந்த விசாரணையில் இருக்கும்போதே, ஆராயி வீட்டில் நடந்த சம்பவத்தைப் போலவே சீர்காழி, மீன்சுருட்டி, ஏ.கே.சத்திரம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் செய்துவிட்டு, 2012 முதல் 2016 வரை சிறையில் இருந்து வெளியே வந்த புவனகிரியைச் சேர்ந்த வீரன் என்பவரின் மகன் தில்லைநாதன் (36) என்பவரைப் பற்றிய தகவல், காவல்துறைக்குக் கிடைத்தது. அதையடுத்து, அங்கு சென்று ரகசியமாக தில்லைநாதனைப் பற்றி விசாரித்தபோதுதான், அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. அதன்பிறகு, திருக்கோவிலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், தில்லையின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்திருக்கிறது போலீஸ். அப்போது, அந்தப் பகுதிகளில் தில்லைநாதனை அடிக்கடிப் பார்த்ததாகக் கூறியதால் உஷாரானது போலீஸ். அதையடுத்து, தனது விசாரணையத் தீவிரப்படுத்திய போலீஸ், அவரைக் கைதும் செய்திருக்கிறது.

தில்லைநாதன் மீது, சென்ற 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், திருவண்ணாமலை மாவட்டம் பவுத்திரம் கிராமத்தில், கணவன்-மனைவியைத் தாக்கிய வழக்கும், அதே ஆண்டு ஜூலை மாதத்தில், சு.வாழாவெட்டி கிராமத்தில் மூன்று பேரை இரும்புக் கம்பியால் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்த வழக்கும், டி.கல்லேரி என்ற ஊரில், ஒரு பெண்ணைத் தாக்கியது, டி.வலசை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை தாக்கிக் கொள்ளையடித்த வழக்குகளும் உள்ளன. அதே வருடம்தான், வெள்ளம்புத்தூர் கிராமத்தில் ஒரு பெண்ணைத் தாக்கிவிட்டு அவரின் தாலிச் செயினைப் பறித்துச்சென்றுள்ளார். இப்படி கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர்மீது நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கிறது காவல்துறை. விழுப்புரம், திண்டிவனத்தில் யாரும் புகார் கொடுக்காததால், தில்லைநாதன் எளிதாகத் தப்பித்திருக்கிறார். சீர்காழி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இதேபோல திருட்டு வழக்கில் ஈடுபட்டதால், 2009-ம் ஆண்டு,  திருச்சி மற்றும் கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். அப்போதுதான் கடலூர் சிறையில் திருக்கோவிலூர், மணம்பூண்டியைச் சேர்ந்த ராமு என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அவர்மூலம்தான், இவர் திருக்கோவிலூருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

''பகல் நேரங்களில் கைலி சட்டையுடன் சுற்றித்திரியும் தில்லைநாதன், மின் விளக்குகள் இல்லாத பகுதிகளைத்தான் தேர்ந்தெடுப்பான். அப்படித்தான் வெள்ளம்புத்தூர் கிராமத்தைத் தேர்வு செய்திருக்கிறான். அதேபோல ஒரு வீட்டைத் தேர்வுசெய்து, அங்கு கொள்ளையடிக்கச் செல்லும்போது, வெறும் ஜட்டியுடன் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறான். ஏற்கெனவே ஒரு கொள்ளை வழக்கில் செல்போனை வைத்து காவல்துறை இவனைக் கைதுசெய்ததால், அதிலிருந்து செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்திருக்கிறான். தில்லைநாதனின் அண்ணன் போனை மட்டும் அடிக்கடி பயன்படுத்திவந்திருக்கிறான்.

ஆனால், ஒவ்வொரு சம்பவத்தின்போதும், அந்த போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவான். அதேபோல, பெண்களைத் தாக்கி, அவர்களின் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, அதன்பிறகு அவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளான். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், நகைகளை மட்டும் திருடிச் சென்றுவிடுவான். ஆராயி குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை என்பதையும், வீட்டில் தாழ்ப்பாள் இல்லை என்பதையும் தெரிந்துகொண்ட தில்லைநாதன், வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான். அப்போது, அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஆராயியின் நகைகளைப் பறிக்க முயன்றபோதுதான், ஆராயியை இரும்புக்கம்பியால் தாக்கியிருக்கிறான். சிறுவன் சமயனும், தனமும் அந்த நேரத்தில் கண் விழித்ததால் இருவரையும் தாக்கியிருக்கிறான். அதில்தான் சிறுவன் சமயன் இறந்துவிட்டார். இருவரும் மயங்கியதும், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறான். அவர்கள், வலியில் துடித்துக்கொண்டிருந்ததால் நகைகளையும், 9,000 ரூபாய், ஒரு செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பியிருக்கிறான். செல்லும் வழியிலேயே செல்போனை மட்டும் தூக்கி எறிந்துவிட்டார். இதுவரை, இந்த வழக்கில் 300 பேருக்கும் மேற்பட்டவர்களை விசாரித்திருக்கிறோம். 90-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் தூக்கமின்றி உழைத்திருக்கிறோம்” என்கிறார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார்.