Published:Updated:

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தேதி கோரி சிறை அதிகாரி மனு!

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தேதி கோரி சிறை அதிகாரி மனு!
வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தேதி கோரி சிறை அதிகாரி மனு!

மைசூர்: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் தேதியை நிர்ணயிக்கக் கோரி மைசூர் தடா நீதிமன்றத்தில் பெல்காம் சிறை அதிகாரி மனு தாக்கல் செய்துள்ளார்.

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தேதி கோரி சிறை அதிகாரி மனு!

இது தொடர்பாக பெல்காம் சிறை உதவி கண்காணிப்பாளர் கல்லுக்கி தாக்கல் செய்துள்ள மனுவில், மரணத்தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிட தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

##~~##

முன்னதாக சிறைச்சாலையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளுக்கு நேற்று மருத்துவ  சோதனை நடத்தப்பட்டது.இது குறித்த செய்தி பரவியதால், சிறை வளாகத்திற்கு  வெளியே ஏராளமான பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் குவிந்தததால் பரபரப்பு  ஏற்பட்டது.

இந்நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும் வருகிற 20 ஆம் தேதி வரை தூக்குத்தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,