Published:Updated:

விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?

விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?
பிரீமியம் ஸ்டோரி
விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?

விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?

விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?

விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?

Published:Updated:
விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?
பிரீமியம் ஸ்டோரி
விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?

ள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த தாயைக் கொலைவெறியுடன் தாக்கி, 13 வயது மகளைக் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து, ஒன்பது வயது சிறுவனை கடுமையாகத் தாக்கிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் விழுப்புரம் போலீஸ் திணறிக்கொண்டிருக்கிறது. கொடூரமான செக்ஸ் சைக்கோ ஒருவன் இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் இருக்கலாம் என்ற பீதி, இந்தப் பகுதியில் பலரையும் தூங்கவிடாமல் செய்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூர் காலனியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஆராயி. கணவனை இழந்த இவர், தன் மகள் மற்றும் மகனுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோதுதான், அந்தக் கொடூரம் நிகழ்ந்தது. சம்பவம் நிகழ்ந்து 15 நாள்களுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பிடிபடவில்லை. போலீஸின் புலனாய்வில் தெளிவான முன்னேற்றம் இல்லாததால், குற்றவாளிகளைப் பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு, தகுந்த சன்மானம் வழங்கப் படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.

விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் வெள்ளம்புத்தூர் பகுதி மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். வெள்ளம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘2017 மே மாதம் எங்கள் ஊரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாயையும், அவரின் 16 வயது மகளையும் மர்ம நபர்கள் இதேபோல நள்ளிரவில் கொடூரமாகத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து விட்டுச் சென்றனர். வீட்டு வாசலில் படுத்திருந்த அந்த வீட்டு ஆணும் தாக்கப்பட்டிருந்தார். அந்தச் சம்பவத்திலும் இதேபோலப் பாதிக்கப்பட்டவர்களின் காதுகள் வழியே ரத்தம் கசிந்தது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். எல்லோருக்கும் தலையில் மோசமாக உள்காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் வந்து விசாரித்தபோது ‘காதுக்குள் விஷத்தை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக’ இவர்கள் சொல்லிவிட்டனர். குடும்பத்துக்கு அவமானம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். 

நான்கு மாதங்கள் கழித்து அக்டோபர் 5-ம் தேதி, இன்னொரு வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த பெண்ணைக் கொடூரமாகத் தலையில் தாக்கி வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவரை மறுபடியும் வீட்டினுள் இழுத்துப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அந்தப் பெண்ணின் தாலியையும் அறுத்துச் சென்றனர். ஆனால், வெளியே தெரிந்தால் குடும்பத்துக்கு அவமானமாகிவிடும் என நினைத்து அவர்கள் யாரும் போலீஸில் புகார் அளிக்கவில்லை. கட்டிலிலிருந்து விழுந்து தலையில் அடிபட்டதாக அந்தப் பெண் சொல்லிவிட்டார். கடந்த டிசம்பர் மாதம் வீட்டுக்கு வெளியே கணவருடன் படுத்திருந்த பெண்ணின் தாலியை மட்டும் அறுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் போலீஸில் புகார் செய்யவில்லை என்றாலும், நடந்த சம்பவங்கள் போலீஸின் கவனத்துக்குப் போனது. அப்போதே போலீஸ் உஷாராகி நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தப் பாதிப்பு நிகழ்ந்திருக்காது” என்றனர் சோகத்துடன்.
ஆராயி வழக்கில் விசாரணை மேற்கொண்டுவரும் போலீஸார், “ஆராயி தாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், அவரது வீட்டிலிருந்து ஆண்கள் பயன்படுத்தும் உள்ளாடை ஒன்றும், ஆண்கள் அணியும் காப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டன. வீட்டிலிருந்த சமையல் பாத்திரம் ஒன்றில் ரத்தம் படிந்துள்ளது. அது குற்றவாளிகளின் ரத்தமாக இருக்கலாம். அதைச் சேகரித்து சோதனைக்காக அனுப்பியுள்ளோம். வேறு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று நான்கு மாத இடைவெளி இருக்கிறது. எனவே, அடிக்கடி வெளியூருக்கு வேலைக்குச் சென்று வருபவர்களைக் கண்காணிக் கிறோம். வெள்ளம்புத்தூருக்கு அருகில் பணிபுரியும் வடமாநிலத்தவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். நடந்த சம்பவங்களைப் பார்த்தால், ஒரே ஒரு நபர் தனியாக வந்து செய்கிற காரியம் போலத் தெரியவில்லை. ஆனால், பொதுவாக செக்ஸ் சைக்கோக்கள் தனியாகத்தான் திரிவார்கள். தங்களுக்கு யாராவது ஆபத்து ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகம் எழுந்தால், அவர்களைத் தாக்கிவிட்டு வேட்டையில் இறங்கு வார்கள். அந்தக் கோணத்திலும் விசாரிக்கிறோம்’’ என்றனர்.

விழுப்புரம் கொடூரம்... பின்னணியில் செக்ஸ் சைக்கோ?

வழக்கின் தற்போதைய போக்கு குறித்து விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமாரிடம் கேட்டோம். ‘‘15-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்திருக்கிறோம். விசாரணை பாதிக்கும் என்பதால் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்” என்றார்.

புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆராயியின் உடல்நிலை சற்று தேறிவருகிறது. அதே நேரத்தில், சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவர் மயக்க நிலையிலேயே உள்ளார். தலையில் தாக்கப்பட்டிருப்பதால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு காதுகளின் வழியே ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை செய்ய
முடியாத அளவுக்கே இன்னமும் அவர்களின் நிலை உள்ளது.

இந்தக் கொடூரத்தை வழக்கம் போலவே போலீஸ் அலட்சியமாக விட்டுவிடக்கூடாது என்பதே அந்தக் கிராம மக்களின் அச்சமாக உள்ளது.

- ஜெ.முருகன்
படங்கள்: தே.சிலம்பரசன்