Published:Updated:

“சமாதானமா போனதுதான் நாங்க செஞ்ச தப்பு!”

“சமாதானமா போனதுதான் நாங்க செஞ்ச தப்பு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சமாதானமா போனதுதான் நாங்க செஞ்ச தப்பு!”

வேதனையில் அஸ்வினி குடும்பம்

‘‘பிளான் பண்ணி என் மகளைக் கொலை செஞ்சிருக்காங்க. அழகேசனுக்கு உடந்தையா நிறைய பேர் இருந்தி ருக்காங்க. அழகேசனின் குடும்பமும் இதுக்குத் துணை போயிருக்கு. அவங்க அக்காவுக்கும் சொந்தக்காரங்களுக்கும் இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு’’ எனக் குற்றம்சாட்டுகிறார் அஸ்வினியின் தாயார் சங்கரி.

சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்துவந்த மாணவி அஸ்வினி, கல்லூரி அருகிலேயே அவரைக் காதலித்த அழகேசனால் குத்திக்கொல்லப் பட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ‘அந்தப் பொண்ணும்தானே காதலிச்சிருக்கு. இந்தப் பையன் பாவம். அவனும் நிறைய செலவு செஞ்சி ருக்கானாம்’ என்கிற ரீதியில் அழகேசனுக்கு ஆதரவாகச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ‘‘இதுபோன்ற பேச்சுகள், அஸ்வினிக்குக் தரப்படும் மற்றொரு மரண தண்டனை’’ என வேதனையுடன் சொல்கிறார்கள் அஸ்வினி குடும்பத்தினர்.

மகளைப் பறிகொடுத்து விட்டுப் பெரும் சோகத்திலிருந்த அஸ்வினியின் தாயார் சங்கரியைச் சந்தித்தோம்.

“சமாதானமா போனதுதான் நாங்க செஞ்ச தப்பு!”

“என் கணவர், 2006-ல் கட்டட வேலை செஞ்சப்போ இறந்துட் டாரு. அப்போ, அஸ்வினிக்கு 5 வயசு. வீட்டு வேலை செஞ்சு என் ரெண்டு புள்ளைங்க ளையும் படிக்க வெச்சேன். சில வருஷங்களுக்கு முன்பா, அந்தத் தெருவுக்குக் குடிவந்தோம். அங்கேதான், இந்தப் பாவி அழகேசனை அஸ்வினி பார்த்திருக்கா. பக்கத்து வீட்டுக் காரங்கனு நாங்களும் பழகி னோம். லவ் பண்றதா அஸ்வினி கிட்ட சொல்லியிருக்கான். அப்போ, அவ 9-வது படிச்சிட்டு இருந்தா. எப்படியோ பேசி சம்மதிக்க வெச்சுருக்கான். எனக்கு விஷயம் தெரிஞ்சப்போ, ‘இதெல்லாம் வேணாம்மா. ஒழுங்கா படி. உனக்கு இன்னும் வயசு இருக்கு’னு சொன்னேன். ஆனாலும், எல்லாமே கைமீறிப் போச்சு. ஒருகட்டத்துல, இவங்க காதலுக்கு நானும் சம்மதிச்சேன்.

“சமாதானமா போனதுதான் நாங்க செஞ்ச தப்பு!”
“சமாதானமா போனதுதான் நாங்க செஞ்ச தப்பு!”

எங்க குடும்பத்துக்கு அவன் நிறைய உதவி செஞ்சான்னு சொல்றாங்க. அது உண்மையே கிடையாது. அவன்கிட்ட இருந்து ஒரு பைசாகூட நாங்க வாங்கின தில்லை. நான்தான், அஸ்வினிக்கு காலேஜ் ஃபீஸ் கட்டினேன். 27,000 ரூபாய் ஃபீஸ் கட்டின ரசீது என்கிட்ட இருக்கு. எங்க வீட்டுக்காரர் இறந்தப்போ வந்த பணத்தை யும், அவருக்கு வந்த இன்ஷூரன்ஸ் பணத்தையும் வச்சுதான் படிக்க வெச்சேன். அழகேசனுக்கு குடிப்பழக்கம் அதிகமா இருந்ததால, அவனை விட்டு அஸ்வினி விலக ஆரம்பிச்சா. அதனால, அவன் தொல்லை கொடுக்க ஆரம்பிச்சான். ‘நீ எனக்குக் கிடைக்க லைன்னா... உன்னைக் கொன்னுட்டு நானும் செத்துருவேன்’னு மிரட்டியி ருக்கான். நாங்க யாருமே இல்லாதப்போ வீட்டுக்குள்ள நுழைஞ்சு, கட்டாயப்படுத்தி அவளுக்குத் தாலி கட்டியிருக்கான். அதை அவ அறுத்துப் போட்டுட்டா. அவனோட தொல்லை எல்லைமீறினதால, பிப்ரவரி 16-ம் தேதி மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் செஞ்சோம். அவன்கிட்ட போலீஸ் விசாரிச்சாங்க. ரெண்டு குடும்பங்களும் அங்கேயே சமாதானமா போனோம். அதுதாங்க நாங்க செஞ்ச பெரிய தப்பு. அதுவே அஸ்வினியோட விதியை முடிச்சுடுச்சு. அஸ்வினியைக் கொல்றதுக்கு கத்தியோட பைக்ல வந்திருக்கான். அந்த பைக் எங்க போச்சுனு தெரியல. அவன்கூட சில பேர் வந்திருக்காங்க. கெரசின் கேன், லைட்டர்னு செட்டப் பண்ணி வந்திருக்கான். எல்லாத்தையும் விசாரிச்சு அவனை தூக்குல போட ணும்” என்று கதறியழுதார்.

அஸ்வினியின் அண்ணன் நேதாஜி, “நாங்க லவ் மேரேஜ்க்கு எதிரான ஆளுங்க இல்லை. ஜாதியும் பாக்கலை. ஆனா, ‘அஸ்வினிக்கு விருப்பம் இல்லாம, அவளை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது’னு அழகேசன்கிட்ட சொன்னேன். ‘அவனோட காசுல படிச்சா... விட்டுட்டுப் போயிட்டா’னு சமூக வலைதளங்களில் சிலர் கமென்ட் போடுறாங்க. இப்படிப் பேசுறது ரொம்ப அநியாயம். அவன்கிட்ட இருந்து எதுவுமே இவ வாங்கலை. இரண்டு லட்சம் கொடுத்தான்னு பொய் சொல்றாங்க. ‘உன்னை நினைத்து’ படம் மாதிரி ஆயிடுச்சுனு சிலர் கதைகட்டி, இறந்த பெண்ணை அசிங்கப்படுத்துறாங்க” என்றார் வேதனையுடன்.

“சமாதானமா போனதுதான் நாங்க செஞ்ச தப்பு!”

தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தனிடம் பேசினோம். “தன் காதலை மறுத்தால், அங்கேயே கொலை செய்வதுவிடுவது என்று தான் கத்தியுடன் அழகேசன் வந்தி ருக்கிறார். அவரிடமிருந்து கத்தி, லைட்டர் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படும். பொது மக்கள் தாக்கியதால் அழகேசனுக்கு ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அஸ்வினியின் புகார் அடிப்படையில், அழகேசன் எச்சரிக்கப்பட்டார். ஒருகட்டத்தில், இரு குடும்பத்தினரும் சுமுகமாகச் சென்றுள்ளனர். அப்போது அஸ்வினி குடும்பத்தினர் பின்வாங்காமல் இருந்திருந்தால், காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கும்” என்றார்.

அழகேசனின் சகோதரர் கணபதியின் கருத்தைக் கேட்கத் தொடர்புகொண்டோம். அவருடன் பேசமுடியவில்லை.

- சி.மீனாட்சிசுந்தரம்
படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு